நாங்க ஃப்ரெண்ட்ஸ்ப்பா... ரெஸ்டாரெண்ட்டில் மேக் அப் இன்றி ரிலாக்ஸ்டாக தோசை சாப்பிடும் சூப்பர் கூல் ஹீரோயின்ஸ்!

நாங்க ஃப்ரெண்ட்ஸ்ப்பா... ரெஸ்டாரெண்ட்டில் மேக் அப் இன்றி ரிலாக்ஸ்டாக தோசை சாப்பிடும் சூப்பர் கூல் ஹீரோயின்ஸ்!

BFF (Best Friend Forever) கீர்த்தி சுரேஷ் & ப்ரியங்கா அருள் மோகன் என்றொரு புகைப்படம் சோசியல் மீடியாக்களில் தற்போது வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. புகைப்படத்தில் மேக்கப் ஏதுமின்றி ப்ரியங்கா அருள் மோகனும், கீர்த்தி சுரேஷும் தென் தமிழகத்தின் ஏதோ ஒரு ரெஸ்டாரெண்ட்டில் இணைபிரியாத் தோழிகளாக அருகருகே அமர்ந்து கொண்டு சந்தோஷம் பூசிய முகங்களுடன் தோசை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இருவரது ரசிகர்களுக்கும் இது குளுகுளு புகைப்படமாச்சே. இருவருமே தற்போது அருகருகே உள்ள இடங்களில் ஷூட்டிங்கில் இருப்பதால் இணைந்து சென்று உணவருந்தி தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதை அவர்களது மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் புகைப்படமெடுத்து இணையத்தில் பகிர்ந்து கொள்ள அது வைரலாகி விட்டது.

புகைப்படத்தின் அடியில் ரசிகர்களின் கேள்வி குவிந்து கொண்டிருக்கிறது. இது எங்கு எடுக்கப்பட்ட புகைப்படம்? யார் எடுத்தார்கள்? இந்த ரெஸ்ட்டாரெண்ட் எங்கிருக்கிறது? இருவரும் சேர்ந்து நடிக்கிறார்களா? அது என்ன படம்? இத்யாதி... இத்யாதி கேள்விகள் குவிந்து வருகின்றன. ப்ரியங்கா அருள் மோகன் இப்போது தனுஷ் ஜோடியாக நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்துக்காக குற்றாலத்தில் முகாமிட்டிருக்கிறார். கீர்த்தி சுரேஷ் ஒரு பக்கா வுமன் செண்ட்ரிக் காமெடி படமான “ரகு தாத்தா”வுக்காக அந்தப்பக்கம் தான் முகாமிட்டிருக்கிறார். இருவரும் அருகருகே இருப்பதால் சேர்ந்து நேரம் செலவழிக்கலாமே என்று தோன்றியிருக்கலாம்.

அவர்கள் சேர்ந்து சுற்றுவது அவர்களுக்கு சந்தோசமாயிருப்பதைக் காட்டிலும் ரசிகர்களுக்குத் தான் ரொம்பவும் குதூகலமாகி விட்டது போலத் தெரிகிறது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com