தேசிய சினிமா தினம்; தேதி திடீர் மாற்றம்!

தேசிய சினிமா தினம்; தேதி திடீர் மாற்றம்!

தேசிய சினிமா தினம் வரும் செப்டம்பர் 16- ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 23- ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

-இதுகுறித்து மல்டிபிளஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு கூறியதாவது;

இந்த வருடம் முதல் செப்டம்பர் 16-ம் தேதியை தேசிய சினிமா தினமாக கொண்டாட முடிவெடுக்கப் பட்டது. அந்த வகையில் அன்றைய தினத்தில் அனைத்து திரையரங்குகள் மற்றும் பிவிஆர், ஐநாக்ஸ், கார்னிவெல், ஏசியன், மூவிடைம் உள்ளிட்ட குழுமங்களுக்கு சொந்தமான சுமார் 4,000 மல்டிபிளஸ் திரையரங்குகளில் டிக்கெட் விலை வெறும் 75 ரூபாயாக விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனால், செப்டம்பர் 16-ம் தேதியன்று சிம்புவின் வெந்து தணிந்தது காடு, அருண் விஜய்யின் சினம் உள்ளிட்ட புதிய படங்கள் வெளியாக உள்ளன.

இந்நிலையில்  குறைந்த கட்டணத்தில் டிக்கெட் விற்கப்பட்டால், அது வசூலைப் பாதிக்கும் என திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.

அதனால் தேசிய சினிமா தினம் என்பது செப்டம்பர் 16-ம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 23-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

-இவ்வாறு தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com