Director Kiran Durairaj
Director Kiran Durairaj

எதையும் மாற்றும் அறிவியலால் சாதியையும் ஒழிக்க முடியும் - நவயுக கண்ணகி இயக்குனர் கிரண் துரைராஜ்!

இவள் புதிரானவள்(2.5 / 5)

விமர்சனம்:

கிரண் துரைராஜ் இயக்கத்தில் ஷார்ட் பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளிவந்துள்ளது நவயுக நாயகி திரைப்படம்.

வேலூர் மாவட்டத்தில் வெவ்வேறு பிரிவை சேர்ந்த  ஸ்வாதியும், நந்தாவும் காதலிக்கிறரர்கள். இந்த காதலை ஏற்றுக்கொள்ள மனமில்லாத ஸ்வாதியின் அப்பாவும், உறவினர்களும் நந்தாவை கொலை செய்து விடுகிறார்கள். அப்பாவை பழி வாங்க நினைக்கும் ஸ்வாதி, நந்தாவின் இறந்த உடலை கைப்பற்றி, அந்த உடலில் இருந்து மருத்துவ உதவியுடன் உயிரணுக்களை பிரித்து எடுத்து, தன் உடலில் செலுத்தி கொள்கிறார். இதனால் கர்ப்பமாகிறார். இது தெரியாத அப்பா ஸ்வாதியின் திருமணத்திற்க்கு ஏற்பாடு செய்கிறார். இந்த சூழ்நிலையை சுற்றி சாதிக்கு ஒரு சவுக்கடியாக படத்தை தந்துள்ளார் டைரக்டர்.

மேலை நாடுகளில் விபத்து அல்லது வேறுகாரணங்களால் இறக்கும் சில கணவர்களின் உடலில் இருந்து உயிரணுக்களை பிரித்து எடுத்து மனைவிகள் தங்கள் கரு ப்பைக்குள் செலுத்தி குழந்தை பெற்று கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இதை நம் தமிழ் நாட்டின் சாதி அமைப்பை ஆட்டிப் பார்க்கும் அம்சமாக மாற்றி உள்ளார் டைரக்டர்.      அம்பேத்கர், புத்தர், பெரியார் என படம் முழுவதும் தலித்திய குறியிடுகள் உள்ளன. சிறிய நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். ஸ்வாதியாக நடிக்கும் பவித்ரா  காதலன் இறக்கும் போது கதறுவதும், மாறி ஒரு மாடர்ன் பெண்ணாக மாறும் போது ஒரு கம்பீரமான நடிப்பையும் தந்துள்ளார்.

Navayuga Kannagi
Navayuga Kannagi

நவயுக கண்ணகி திரைப்படத்தின் இயக்குனர் கிரண் துரை ராஜ் நமது கல்கி ஆன்லைனுக்காக சில கேள்விகளுக்கான பதில்களை பகிர்ந்துள்ளார்.

Q

இது போன்ற படம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?

A

கிரண்: என் பூர்வீகம் வேலூர் மாவட்டம், ஆனால் நான் வளர்ந்து பெங்களூருவில். பெங்களூரில் சாதி என்றால் என்ன என்றே தெரியாது. ஆனால் வேலூர் வரும் போதெல்லாம் சாதி இந்த மண்ணில் ஆழமாக இருப்பதை பார்த்திருக்கிறேன். இங்கே படித்தவர்களிடம் தான் சாதி பாசம் அதிகம் உள்ளது. நான் சினிமாவில் வாய்ப்பு தேடும் போதெல்லாம் என் சாதியை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினார்கள். எதையும் மாற்றும் விஞ்ஞானத்தால் தான்  சாதியையும் ஒழிக்க முடியும் என்ற எண்ணத்தில் தான் இப்படம் எடுத்தேன்.

Q

ஏன் தியேட்டர்களில் வெளியிட வில்லை, அச்சுறுத்தல் காரணமா?

A

கிரண்: எந்த வித அச்சுறுத்தலும் இல்லை. ஏழு லட்ச ரூபாய் செலவில் இந்த படத்தை எடுத்தேன். இந்த பட்ஜெட்டிற்க்கு OTT தான் சரியாக இருக்கும் என்பதால் இந்த தளத்தை அணுகினேன். 

Q

உங்கள் அடுத்த படம் சாதி பிரச்சனையை சொல்லும் படமாக இருக்குமா?

A

கிரண்: கண்டிப்பாக இருக்காது. சஸ்பென்ஸ் திரில்லர் வகையில் மாறுபட்ட படமாக இருக்கும்.v

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com