அன்னப்பூரணிக்கு வந்த சிக்கல்.. ஜெயஸ்ரீ ராம் என கூறி வருத்தம் தெரிவித்த நயன்தாரா!

நயன்தாரா
நயன்தாரா

ன்னப்பூரணி படம் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து நடிகை நயன்தாரா ஜெய்ஸ்ரீ ராம் என குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனரான நீலேஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, கார்த்திக் குமார், குமாரி சச்சு, அச்யுத் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். ஜீ ஸ்டூடியோஸ் ட்ரைடண்ட் ஸ்டுடியோஸ் மற்றும் நாட் ஸ்டூடியோ இணைந்து தயாரித்துள்ளது. சத்யன் சூர்யா ஒளிப்பபதிவு செய்துள்ளார்.

இந்த படம் கடந்த டிசம்பர் மாதம் திரையரங்கில் வெளியாகி பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் ஒடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வந்தது. இந்த படத்தில், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஃபர்ஜான் என்ற கதாபாத்திரம், கதாநாயகியை இறைச்சி சாப்பிட வைப்பதற்காக ராமர் இறைச்சி சாப்பிடுவார் என்று கூறுவது போலவும் அர்ச்சகர் மகளான கதாநாயகி நமாஸ் செய்வது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இந்தப் படம் வேண்டும் என்றே எடுக்கப்பட்டுள்ளது என்று மும்பையை சேர்ந்த, சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர் மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இந்த படம் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த நடிகை நயன்தாரா அறிக்கை மூலம் தனது வருத்தத்தை பதிவிட்டுள்ளார். அதில், ஜெய்ஸ்ரீ ராம் என தொடங்கிய அவர், அன்னபூரணி படம் நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார். நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பி, சிலரின் மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்ததாக கூறியிருக்கிறார்.

தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்ட ஒரு படம் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது சற்றும் எதிர்பாராத ஒன்று என்றும் நயன்தாரா குறிப்பிட்டுள்ளார். கடவுள் மீது மிகுந்த நம்பிக்கையுள்ள தாம், ஒரு சிலரின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். 20 ஆண்டுகள் திரைப்பயணத்தின் நோக்கமே நேர்மறையான எண்ணங்களை பரப்புவதுதான் என்றும் நயன்தாரா சுட்டிக்காட்டியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com