Nayanthara
Nayanthara

இன்ஸ்டாவில் நயன்தாராவை பின்தொடரும் 1.4 மில்ல்யன் ஃபாலோயர்கள்!

Published on

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்ஸ்டாவில் எண்ட்ரி கொடுத்துள்ளார். இதன் தொடக்கமாக தனது குழந்தைகளுடன் தலைவர் டயலாக் பேசிய ரீல்ஸ்-ஐ வெளியிட்டுள்ளார்.

நடிகை நயன்தாரா பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னேறியவர். ஹீரோக்கள் கோலாட்சி கொண்டிருந்த காலத்தில் ஹீரோ இன்றி ஹீரோயினாக மட்டுமே நடித்து அசத்தியவர். இவருக்கு கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணமான நிலையில் இருவருக்கும் கடந்த ஆண்டு வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தனர்.

உலக அளவில் instagram, எக்ஸ் உள்ளிட்ட பல சமூக வலைதளங்கள் பிரபலமாக இருக்கின்றன. அதில் தமிழ் திரையுலகை சேர்ந்த பெரும்பாலான நடிகர், நடிகைகள் தங்கள் கணக்குகளை வைத்திருக்கின்றனர்.

ஆனால் நடிகை நயன்தாரா எந்த ஒரு சமூக வலைதள பகுதியிலும் கணக்கு தொடங்காமல் இருந்தார். இந்த நிலையில் தற்போது instagram பகுதியில் தனக்கென பிரத்தியேக ஒரு பகுதியை தொடங்கியுள்ளார். அந்த பக்கத்தில் முதல் பதிவாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ஜெயிலர் திரைப்படத்தின் ஹுக்கும் பாடலுக்கு, தன் குழந்தைகளுடன் எண்ட்ரி கொடுக்கும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.

இதுவரை எந்த சமூக வலைதளத்திலும் இல்லாமல் இருந்த நயன்தாரா, தற்போது இன்ஸ்டாகிராம் இணையத்தல் இணைந்துள்ளார். நேற்றைய தினம் இன்ஸ்டாகிராமில் கணக்கைத் தொடங்கிய நயன்தாராவை தற்போதுவரை 1.4 மில்லியன்  ஃபாலோயர்கள் பின் தொடர தொடங்கியுள்ளனர்.மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com