
சமீபத்தில் விக்னேஷ் சிவன் தயாரித்து சரவணன் இயக்கத்தில் வெளிவந்த கனெக்ட் படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். பல மர்மங்களை கொண்ட இந்த படத்தில் நயன்தாராவின் நடிப்பு பரவலாக பல்வேறு தரப்பினரால் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த படம் தொடர்பாக நயன்தாரா பேசும் போது "எனக்கு பேய், ஆவி மீது நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் தனியாக இருக்கும் போது கொஞ்சம் பயமாக இருக்கும்.
முரண்பாடு, திகில், மர்மம் நிறைந்த படங்கள் சிறு வயதிலிருந்து பார்க்கப் பிடிக்கும். கடந்த இருபது ஆண்டுகளாக சினிமாவில் ரசிகர்கள் காட்டும் அன்பைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.
சினிமா விழாக்களில் கூட பெண்களுக்கு முக்கியத்தும் தரப்படுவதில்லை என்று உணர்ந்தேன். இதனால் பல விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்தேன். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். இன்று ஹீரோயினை மைய்யப் படுத்திய படங்கள் ஐந்து முதல் ஆறு படங்களாவது வருகின்றன. இது மகிழ்ச்சியான தருணம்" என்கிறார்.
மேலும் கனெக்ட் படத்தில் சத்யராஜ், அனுபம் கர் போன்றவர்களுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்றும் நயன்தாரா கூறுகிறார்.