அடடே இவ்வளவு வளர்ந்திட்டாங்களே! விக்கி - நயன் குழந்தைகளின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

நயன் - விக்கி
நயன் - விக்கி
Published on

னது குழந்தைகளுடன் விக்னேஷ் சிவன், நயன்தாரா கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னணி ஹிரோயினாக வலம் வரும் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து கடந்த வருடம் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார். இதனை தொடர்ந்து தனது குழந்தைகளுக்காக நேரம் செலவிட்டு வருகின்றனர்.

அவ்வபோது குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். தொடர்ந்து ஓணம் பண்டிகை கொண்டாட்டம், பிறந்த நாள் கொண்டாடம் என ஒவ்வொரு புகைப்படங்களாக அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர். பல சர்ச்சைகளில் சிக்கினாலும் எதை பற்றியும் கவலை படாமல் குடும்பத்தை கவனித்து வருகிறார் நயன்தாரா.

அந்த வகையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, தனது உயிர், உலக், கணவன் விக்னேஷ் சிவன் மற்றும் அம்மாவுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிய புகைப்படத்தை நயன்தாரா பகிர்ந்துள்ளார்.

அதில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், குழந்தைகள் மற்றும் அவரது அம்மா என அனைவரும் சிகப்பு நிற ஆடையில் அழகாக போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அடடே அழகாக இருக்கிறார்களே குழந்தைகள், அதற்குள் குழந்தைகள் இவ்வளவு வளர்ந்து விட்டார்களே எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com