2 முறை தோல்வி.. இன்று ரஜினி, கமலை இயக்கும் உயரம்! நெல்சன் திலீப்குமாரின் 'சக்ஸஸ் ஃபார்முலா'!

வேட்டை மன்னன் வீழ்ந்தபோது துவளாமல், தமிழ் சினிமாவின் இமயங்களை இயக்கும் நெல்சனின் மாஸ் பயணம்!
நெல்சன் திலீப்குமார்|nelson dilip kumar
நெல்சன் திலீப்குமார்AI image
Updated on

விஜய் டிவி டூ கோலிவுட்: நெல்சனின் 20 ஆண்டுகால அசாத்திய சினிமா பயணம்

விஜய் டி.வி.யிலிருந்து வந்த நெல்சன் திலீப்குமாரின் சினிமா பயணம் 20 வருடங்களில் தற்போது ரஜினியையும், கமல்ஹாசனையும் இணைத்து படம் இயக்கும் அளவு உயர்ந்திருக்கிறது‌. இவரின் பயணம் சாதாரணமானதல்ல‌. நெல்சன் விஷ்வல் கப்யூனிகேஷனில் டிகிரி வாங்கிய பிறகு விஜய் டிவியில் ஸ்க்ரிப்ட் ரைட்டராக பணியாற்றிய பிறகு சினிமாவில் நுழைந்தார்.

2010ம் ஆண்டு சிலம்பரசன், ஹன்சிகா மோட்வானி ஆகிய நடிகர்கள் பங்கெடுத்த 'வேட்டை மன்னன்' என்ற படத்தை துவங்கினார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக படம் பாதியிலேயே கைவிடப்பட்டது‌. இதற்கு சரியான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. அதன் பிறகு 2017ம் ஆண்டு மறுபடியும் இதே படத்தை அனிருத் இசையில் தொடர்ந்தார். அதுவும் கைகூடவில்லை. 

கோலமாவு கோகிலா முதல் ஜெயிலர் வரை: நெல்சனின் அசுரத்தனமான சினிமா பயணம்

எந்த ஒரு மனிதனும் இரண்டு முறை தோல்வி அடைந்தால் இயக்குனர் துறையை விட்டே விலகி விடுவார்கள். ஆனால் நெல்சன் முயற்சியைத் கைவிடவில்லை. புதிதான ஒரு கதையில் ஒரு இளம்பெண் தன் அம்மாவின் புற்றுநோய் சிகிச்சைக்காக பணத்தை தேடி அலையும் கதையை காமெடி கலந்த சுவையில்  கோல மாவு கோகிலா என்ற கதையை உருவாக்க அது 2018ம் ஆண்டு நயன்தாரா, யோகி பாபு நடிப்பில் அனிருத்தின் இசையில் படம் வெளிவந்தது‌.

இந்தப் படத்தின் அபார வெற்றி மூலம் நெல்சன் சிறந்த இயக்குனராக அடையாளம் பெற்றார். நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த டாக்டர் படம் 2021ம் வருடம் நெல்சனுக்கு கொரோனா பீரியடாக இருந்தாலும் சிறந்த வெற்றியைக் கொடுத்தது‌. இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் படியான பிரம்மாண்ட வெற்றி  2022ம் ஆண்டு வெளியான பீஸ்ட் படம் நெல்சனின் தகுதியை உயர்த்தியது‌. இது அவரின் இயக்குனர் திறமையை நன்கு பறைசாற்றியது‌. அதன் பிறகு 2023ம் ஆண்டு வெளிவந்த ரஜினிகாந்த் நடித்த படமான ஜெயிலர் படம் இவரின்  வாழ்க்கையையே மாற்றியது என்று சொல்லலாம்‌. 600 கோடி வசூல் சாதனை படைத்த படம் என்று அன்றைய காலக்கட்டத்தில் பேசப்பட்டது‌.

ரஜினிகாந்த் என்ற பெரிய நடிகரை வைத்து தன்னுடைய தனித்தன்மையை படத்தில் வெளிக்காட்ட முடியும் என்பதை நெல்சன் நிரூபித்தார். ஒரு பெரிய நடிகரின் இமேஜ் மூலம் அவருடைய தனித்தன்மை குறையாமல் அந்தப்படம் வெற்றிப்படமானது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் படங்களில்  ஹீரோ மற்றும் வில்லன்களையே முழுக்க நம்பாமல் கதைக்களம், உணர்ச்சிகள், காமெடி ஆகியவற்றிலேயே அதிக அழுத்தம் கொடுத்து இயக்கியிருப்பது தெரியவரும்‌.

இதையும் படியுங்கள்:
ஒரு கைக்கடிகாரம் விலை 40 லட்சமா.. அப்படி என்னதான் இருக்கு இந்த மாதவன் டைட்டன் வாட்ச் உள்ளே!
நெல்சன் திலீப்குமார்|nelson dilip kumar

இவர் க்வெட்டின் தாரான்டினோ, ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் போன்றவர்களின் இயக்கங்களால் ஈர்க்கப்பட்டார் என்று கூறியுள்ளார். பாலசந்தர் மற்றும் மணிரத்னம் போன்றவர்கள் கதைக்களத்தில் பெரும்பாலும் கதாபாத்திரத்திலேயே கவனம் செலுத்துவதை  தாண்டி ஒரு சாதாரண மனிதனை காமெடி, சரியான உணர்ச்சிகளை வெளிப்படுத்தல் மற்றும் குற்றங்களுக்கான சூழல் என்று பெரும்பாலான இவர் படங்களில் கையாண்டிருப்பது அவரின் வெற்றிக்கான ஃபார்முலாவிற்கு எடுத்துக் காட்டாக இருக்கிறது.

நெல்சன் திலீப்குமார்|nelson dilip kumar with rajini and kamal
நெல்சன் திலீப்குமார்AI Image

தமிழ் சினிமாவின் இரு இமயங்களை இயக்கும் நெல்சனின் பிரம்மாண்ட சினிமா பயணம்

ரஜினியை இயக்கும் அதே வேளையில், கமல்ஹாசன் தயாரிப்பிலும் படம் இயக்கவிருக்கிறார். இது ஒரு மாபெரும் சாதனையாகும். ஒரு ஸ்க்ரிப்ட் ரைட்டராக விஜய் டிவியில்  தொடங்கிய பயணம் தற்போது இரண்டு இமயங்களை இணைத்து இயக்கும் அளவிற்கு இந்த 20 வருட சினிமா பயணம் அவரை உயர்த்தி இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
செம்மரக்கடத்தல் உண்மை சம்பவமா? தனுஷின் 'ஓம்' ட்ரெய்லர் உடைக்கும் அதிரடி ரகசியங்கள்!
நெல்சன் திலீப்குமார்|nelson dilip kumar

அவருடைய முழு விடாமுயற்சியும், கதையை மக்களிடம் சென்று சேர்க்கும் கலையில் நன்கு தேர்ச்சி பெற்ற ஒரு சிறந்த இயக்குனர் என்ற அடையாளத்தை தந்ததில் ஆச்சர்யமில்லை. உழைப்பும் விடாமுயற்சியும்  மனிதனை உயர்த்தும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக நெல்சன் திகழ்கிறார். இவர் தன் இருபது வருட முயற்சியில் தொடர்ந்து  ஒரு உயரிய இடத்தைப் பெற்றது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

ஒரு சாமானிய மனிதன் தன் தனித்துவமான திறமையையும், நகைச்சுவை உணர்வையும் மூலதனமாகக் கொண்டு, கடுமையான சவால்களுக்கு மத்தியிலும் எப்படி ஒரு தவிர்க்க முடியாத பிராண்டாக உருவெடுக்கலாம் என்ற மிகச்சிறந்த உத்தியை நீங்கள் உணர்ந்து கொள்ளப் போகிறீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com