இந்தியன் 2 படத்தை கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்!

இந்தியன் படத்தில் கமல்
இந்தியன் படத்தில் கமல்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

இந்தியன் 2 ஓடிடி ரிலீஸ் தொடர்பாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல் ஹாசன் நடித்து வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் முதல் பாகம், மிகப் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம், எடுக்கப்பட உள்ளதாக கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ரஜினியின் 2.O. அதன் பின்னர் அவரது படம் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தான் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். கடந்த 1996-ல் வெளிவந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.

இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

ஷூட்டிங் நிறைவடைந்து கிராபிக்ஸ் பணிகள் தற்போது நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், எப்போது படம் ரிலீஸ் ஆகும் எனும் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், இந்தியன் 2 ஓடிடி ரிலீஸ் தொடர்பாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டரில் படம் வெளியான பின்னர் ஓடிடியில் வெளியிடும் உரிமையை பெரும் தொகை கொடுத்து அந்நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com