
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக கௌதம் வாசுதன் இயக்கிய துருவ நட்சத்திரம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அடுத்தகட்டமாக கிரிக்கெட்டை மையப்படுத்தி புதிய படத்தை இயக்கும் அவர் முடிவு செய்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ்நாட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். இவர் இயக்கும் படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை குவிக்கும். இதனாலேயே முன்னணி நடிகர்கள் பலரும் கௌதம் மேனன் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவர். தமிழ், இந்தி, தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் படத்தை இயக்கி உள்ளார். தமிழில் மின்னலே படத்தின் மூலம் அறிமுகமான கௌதம் மேனன் தற்போது நடிப்பிலும் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கி இருக்கிறார்.
தற்போது தமிழில் பல திரைப்படங்களில் குணசித்திர வேடங்களிலும் வில்லன் கதாபாத்திரத்திலும் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகர் என்ற பட்டத்தையும் பெற்றிருக்கிறார் கௌதம் மேனன்.
மேலும் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது துருவ நட்சத்திரம் படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் அடுத்த படத்திற்கான அப்டேட்டை இந்தியா, நியூசிலாந்து அரை இறுதி கிரிக்கெட் போட்டியின் போது அறிவித்திருக்கிறார் கௌதம் மேனன்.
மும்பையில் நடைபெற்ற இந்தியா நியூசிலாந்து முதல் அரை இறுதி போட்டியில் ஆர் ஜே பாலாஜி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கௌதம் மேனன் தெரிவித்தது, நான் அடுத்து இயக்க இருக்கும் படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட கதைக்களம் ஆகும். இந்த படம் மாவட்ட அளவிலான போட்டியில் இருந்து மாநில அளவிலான போட்டிக்கு செல்லும் இளைஞர்களுடைய வாழ்க்கையை உள்ளடக்கியது.
இத்திரைப்படம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும், இப்படத்தின் கதாபாத்திரங்கள் கிரிக்கெட்டையே வாழ்க்கையாக கொண்டிருப்பர் என்று தெரிவித்தார்.