நிவின் பாலியின் Malayalee From India படத்தின் அப்டேட்… ரசிகர்கள் கொண்டாட்டம்!

Malayalee From India
Malayalee From India

நிவின் பாலி நடிப்பில் உருவான Malayalee From India படத்தின் பாடல் இரண்டு நாள் முன்பே வெளியானது. இதனையடுத்து, இப்பாடல் வெறும் 2 நாட்களிலேயே 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்ததால், ட்ரெண்டிங் பாடல் என்று X தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இன்று வெளியானப் படத்தின் போஸ்டர் அப்டேட்டும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

நிவின் பாலி தொடர்ந்து வெகுகாலமாக ஹிட் படங்களை கொடுக்காததால், மலையாளத்தில் அவர் இடத்தை நிரப்ப ஆளே இல்லை என்றுதான் கூற வேண்டும். அந்த இடம் வெற்றிடமாகவே இருந்து வந்தது. நிவின் பாலி ஃபார்ம் அவுட் என்று ரசிகர்கள் நினைத்த நிலையில், தனது கம்பேக்கிற்கான தொடர் முயற்சிகளை மட்டும் அவர் விடவே இல்லை. அந்தவகையில், நிவின் பாலி சமீபத்தில் ராம் இயக்கத்தில் ஏழு கடல், ஏழு மலை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அவருடன் இணைந்து அஞ்சலி, சூரி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதனையடுத்து, மலையாளத்தில் சமீபத்தில் வெளியான வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் Varshangalkku Shesham படத்தில் நிவின் பாலி கேமியோ ரோல் செய்தார். ப்ரனவ் மோகன்லால் நடித்த இப்படம், ஒரு தரமான ஹிட்டைக் கொடுத்தது மட்டுமின்றி, கேமியோ ரோலில் நடித்த நிவின் பாலிக்கும் ஒரு சிறப்பான கம்பேக்காக அமைந்தது. படத்தில் இவரது நடிப்பு மீண்டும் மலையாள உலகில் அவர் இடத்தை நிரப்ப உதவியது.

இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் Malayalee From India படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் நிவின் பாலிக்கு நண்பனாக வினித் ஸ்ரீனிவாசன் நடித்துள்ளார். அதேபோல் அவருக்கு ஜோடியாக அனஸ்வர ராஜன் நடித்துள்ளார். இவர்கள் மூவரும் இடம்பெற்ற பாடல் மிகவும் ட்ரெண்டானது. அதேபோல், இரண்டு நாள் முன்னர் வெளியான Malayalam Anthem என்றழைக்கப்படும் Malayalee From India படத்தின் பாடல் வெளியானது. இப்பாடல் இரண்டு நாட்களிலேயே 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சென்றுள்ளது. இதனால் இது இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடலாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
சரித்திர சாதனைப் படைத்த 'ஹனுமான்': 100 நாட்களைக் கடந்து மெகா வெற்றி!
Malayalee From India

அதேபோல், 8 Days to go என்று படக்குழு ஒரு போஸ்ட்ரை இன்று காலை வெளியிட்டது. இதிலும் நிவின் பாலி மற்றும் வினித் ஸ்ரீனிவாசன் ஆகியோரின் போட்டோ இருந்தது. ஏற்கனவே, இப்படம் மே 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தப் போஸ்டரால், Malayalee From India என்ற ஹேஷ்டேக் X தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com