'ஜெயிலர்' படத்தில் ரஜினியுடன் இணையப்போகும் நம்பர் 1 ஹீரோ! மாஸ் அப்டேட்!

'ஜெயிலர்' படத்தில் ரஜினியுடன் இணையப்போகும் நம்பர் 1 ஹீரோ! மாஸ் அப்டேட்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினியுடன் இணைந்து, பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் 'ஜெயிலர்' படத்தில் மேலும் ஒரு மாஸ் நடிகர் ரஜினியுடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளன்று, 'ஜெயிலர்' படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் முத்துவேல் பாண்டியன் என்று போஸ்டரை வெளியிட்டிருந்தது வைரலானது.

இந்நிலையில் ரஜினியின் 'ஜெயிலர்' படம் குறித்த பல சுவாரஸ்ய அப்டேட்கள் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஏற்கெனவே, கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார் என்ற செய்தியே பிரபலமானதையொட்டி, தற்போது மலையாளத்தில் நம்பர் 1 நடிகரான மோகன்லால் இந்தப் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, 'ஜெயிலர்' படத்தில் கேமியோ ரோலில் நடிகர் மோகன்லால் நடிக்கவிருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே கன்னட நடிகர் இப்படத்தில் இருக்கும் நிலையில், தற்போது மோகன்லாலுவும் இணைந்தால் இது பான் இந்தியா சினிமாவாக உருவெடுக்கும் என்பதால் இச்செய்தி ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com