யூட்யூபில் புதிய சாதனை படைத்துள்ள "ஓபன் கங்னம் ஸ்டைல்" பாடல்: 11 ஆண்டு கால வரலாறு!

யூட்யூபில் புதிய சாதனை படைத்துள்ள "ஓபன் கங்னம் ஸ்டைல்" பாடல்: 11 ஆண்டு கால வரலாறு!
Published on

பன் கங்னம் ஸ்டைல் என்ற தென் கொரிய பாடல் 11 ஆண்டுகளைக் கடந்து, 500 கோடி பார்வையாளர்களை கடந்து முன்னணி பாடல்களில் ஒன்றாக உள்ளது.

யூட்யூபில் வெளியாகும் பாடல்கள் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு ட்ரெண்டிங்காக இருப்பதும், பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து ரசிக்கப்படுவதும் இயல்பு. ஏன் பல பாடல்கள் மொழிகளைக் கடந்து ரசிக்கப்படுகின்றன. ஆனால் 2012 ஆம் ஆண்டு வெளியான பாடல் தற்போது வரை யூடியூபில் அதிகம் பார்க்கப்படும் பாடல்களில் ஒன்றாக உள்ளது என்பது வரலாறு ஆகும்.

ஏன், தமிழ்நாட்டிலும் அந்த பாடல் மிகவும் பிரபலமான பாடலாக இருந்த காலமும் உண்டு. தமிழர்களின் தொலைபேசி ரிங்டோனாகவும் இந்த பாடல் ஒளித்து இருக்கிறது.2012 ஆம் ஆண்டு பி எஸ் ஒய் என்ற தென் கொரிய நாட்டைச் சேர்ந்தவரின் குரலில் வெளியான ஓபன் கங்னம் ஸ்டைல் என்ற பாடல் தற்போது வரை யூட்யூபில் ட்ரெண்டிங்கான பாடல்களில் ஒன்றாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பாடலை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. யூடியூப்-ல் தற்போது வரை 500 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது. யூடியூப்-ல் அதிகம் பார்க்கப்பட்ட முதல் பாடல் என்ற பெருமையையும் ஓபன் கங்னம் ஸ்டைல் பிடித்திருக்கிறது.மேலும் இப்பாடல் உலகம் முழுவதுமே மொழிகளைக் கடந்து ரசிக்கப்படும் பாடல்களில் ஒன்றாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com