செல்லோ ஷோ
செல்லோ ஷோ

ஆஸ்கார் பரிந்துரை ‘செல்லோ ஷோ’ பட சிறுவன் உயிரிழப்பு!

Published on

 இந்த வருட ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பாக பரிந்துரைக்கப்பட்ட 'செல்லோ ஷோ' என்ற குஜராத்தி திரைப்படத்தில் நடித்த 10 வயது குழந்தை நட்சத்திரம் ராகுல் புற்றுநோயால் உயிரிழந்தார்.

 குஜராத்தி இயக்குனர் ஃபான் நிலன் இயக்கிய 'செல்லோ ஷோ' என்ற திரைப்படம் சமீபத்தில் 95-வது ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்தப் படத்தில் மனு என்ற 10 வயது சிறுவனாக ராகுல் கோலி நடித்திருந்தார். இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ராகுல் கோலி, அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நோய் தீவிரமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராகுல் கோலி இன்று உயிரிழந்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com