திருமணம் குறித்து மனம் திறந்த நடிகை ஓவியா.. ரசிகர்கள் ஷாக்!

ஓவியா
ஓவியா

பிரபல நடிகை ஓவியா தனது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் களவாணி படம் மூலம் அறிமுகமான நடிகை ஓவியா, அடுத்தடுத்து படங்கள் நடித்தாலும், கோண கொண்ட காரி பாடலில் மிகவும் பிரபலமானார். அடுத்தடுத்து கலகலப்பு, மெரினா, மூடர் கூடம் உள்ளிட்ட நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். தொடர்ந்து பிக்பாஸ் முதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய புரட்சியே செய்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் அன்று செய்த புரட்சி தான் இன்று இந்த அளவு பிக்பாஸிற்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். முதன் முதலில் ரசிகர்கள் ஆர்மி என்று தொடங்கியது ஓவியாவுக்குதான். ஓவியா ஆர்மி லட்சக்கணக்கான ரசிகர்களை உள்ளடக்கியது.

தற்போது 32 வயதாகும் ஓவியா, சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அங்கு அவரிடம் திருமணம் எப்போது என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், தான் யாரிடமும் இருந்தும் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும், நான் தனியாக இருப்பதையே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். ஓவியா திருமணத்திற்கு ஓகே சொன்னால் தூக்கி செல்ல ரெடி என ரசிகர்கள் பலர் காத்து கொண்டிருந்த நிலையில், இவரின் இந்த அறிவிப்பு அவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com