ஆஸ்கருக்கு நிகரான 'எமி அவார்ட்' வென்ற 15 வயது சிறுவன்! யார் இவன்?

Owen cooper
Owen cooper
Published on

சில நாட்களுக்கு முன்பு ஆஸ்கருக்கு நிகரான அவார்ட் என்று சொல்லப்படும் எமி அவார்ட்ஸை வென்ற 15 வயது சிறுவனை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த சிறுவனின் பெயர் Owen Cooper. உலகத்திலேயே, அந்த அவார்டை வைத்திருக்கும் Youngest Actor இவர் தான்.

ஓவன் கூப்பர் 2009 இங்கிலாந்தில் பிறக்கிறார். இவருடைய குடும்பத்திற்கும் சினிமாவிற்கும் சம்மந்தமேயில்லை. இவருடைய அப்பா, அம்மா சாதாரண வேலைக்கு போய் கூப்பரை படிக்க வைக்கிறார்கள். ஆனால், கூப்பருக்கு சிறுவயதிலேயே ரொனால்டோ போல பெரிய கால்பந்து விளையாட்டு வீரனாக வேண்டும் என்று ஆசை. ஒருநாள் புட்பால் மேட்சை முடிந்துவிட்டு வீட்டிற்கு வந்த கூப்பர் டீ.வியில் Tom Hollandன் The Impossible படத்தை பார்க்கிறான்.

அதுவரை கால்பந்து மீது இருந்த ஆசை கொஞ்சம் கொஞ்சமாக சினிமா பக்கம் திரும்ப ஆரம்பிக்கிறது. பையனுடைய ஆசையை புரிந்துக் கொண்ட பெற்றோர், அவனை ஒரு சாதாரண ஆக்டிங் கிளாஸில் சேர்த்து விடுகிறார்கள். எந்த கஷ்டமும் படாமல் இயற்கையாகவே அவனுள் நடிக்கும் திறன் இருக்கிறது என்பதை அங்கு தான் கண்டுப்பிடிக்கிறான்.

அதேசமயம் Netflix அவர்களுடைய புது சீரிஸ்ஸூக்கு நடிகர்களை தேடிக் கொண்டிருந்தது. அந்த சீரிஸூடைய முக்கியமான ஒரு கதாப்பாத்திரம் மட்டும் புதுமுகமாக தான் இருக்க வேண்டும் என்று நெட்பிலிக்ஸ் ஆசைப்பட, அதற்காக நிறைய ஆடிசன் நடத்தப்படுகிறது. ஆனால், அவர்கள் எதிர்ப்பார்த்தப்படி யாருமே கிடைக்கவில்லை. ஒருநாள் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்து கூப்பரும் இந்த ஆடிசனில் கலந்துக் கொள்கிறான்.

இவனுடைய இயற்கையான நடிப்பு திறமையை பார்த்தவர்கள் கூப்பரை உடனடியாக Adolescence என்ற சீரிஸில் முக்கியமான கேரக்டராக நடிக்க வைக்கிறார்கள். முதல் தடவை நடிப்பதால் கொஞ்சம் பயந்தாலும் அவனுடன் நடிக்கும் சக நடிகர்கள் அவனை ஊக்கப்படுத்துகிறார்கள். அதற்கு பிறகு அந்த பையன் அந்த கேரக்டராக நடிக்கவில்லை. அந்த கேரக்டராகவே வாழ ஆரம்பிக்கிறான். அந்த சீரிஸூம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது.

இதையும் படியுங்கள்:
ஊக்கம் (Motivation) வேண்டுமா? அல்லது கட்டுப்பாடு (Discipline) அவசியமா?
Owen cooper

சமீபத்தில் ஆஸ்கருக்கு நிகரான எமி அவார்டில் Best Supporting Actor என்ற அவார்டை வெறும் 15 வயதில் வாங்கி சாதனை படைக்கிறான். ஒரு ஐந்து வருடதிற்கு முன்பு ஓவன் கூப்பரிடம் சென்று கேட்டிருந்தால் நல்ல கால்பந்து விளையாட்டு வீரனாக வேண்டும் என்று சொல்லியிருப்பான். ஆனால், இன்றைக்கு உலகிலேயே சிறந்த நடிகனாக திகழ்கிறான்.

நாம் ஒரு பிளான் போட்டால் கடவுள் நமக்கு ஒரு பிளான் போட்டு வைத்திருப்பார் என்பதை கூப்பர் கதையில் இருந்து நன்றாக தெரிந்துக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com