தமிழகத்தில் தற்காப்பு கலை மீது ஆர்வம் அதிகரிக்கச் செய்த சூப்பர்ஸ்டாரின் ‘பாயும் புலி’ திரைப்படம்!

Rajini's paayum puli movie
Rajini's paayum puli movie

ந்த 2023 ஆம் ஆண்டு பாரம்பரிய மிக்க ஏவிஎம் நிறுவனம் தங்களது படங்களில் படப்பிடிப்புகளின் போது பயன்படுத்த பட்ட பல்வேறு பொருள்களை சேகரித்து AVM ஹெரிடேஜ் என்ற பெயரில் ஏவிஎம் ஸ்டூடியோவுக்குள்ளேயே ஒருமய்யம் அமைத்து பொது மக்கள் பார்வைக்கு வைத்தது. இந்த பொருட்களில் பாயும் புலி படத்தில் ரஜினி ஓட்டிய பைக்கும் இடம் பெற்றது.           

1983 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளன்று வெளியான பாயும் புலி திரைப்படம் படத்தின் மேக்கிங்கிற்க்காக இன்றும் பாராட்டை பெற்று வருகிறது. ரஜினியை வைத்து அதிக படங்கள் இயக்கிய SP முத்துராமன் பாயும் புலியை இயக்கினார். இப்படம்  அன்றைய கால கட்டத்தில் 130 நாட்கள் வரை அரங்கு நிறைந்த படமாக வெற்றி நடை போட்டது. தனது தங்கையை கொன்ற  வில்லனை பழி வாங்கும் வழக்கமான  கதைதான்.

ஆனால் மார்ஷல் ஆர்ட்ஸ் எனப்படும் சண்டை பயிற்சி கலை மூலம் வித்தியாசமாக காட்டியிருப்பார் டைரக்டர். தி 36 த் சேம்பர் ஆப் ஷாலின் என்ற தற்காப்பு கலையை மைய்யமாக கொண்டு வெளிநாட்டு படத்தை தழுவி எடுக்கப்பட்டது. பாயும் புலியில் காதல், செண்டிமெண்ட்டுடன்  தற்காப்பு கலையையும் கலந்து சொல்லியியருப்பார்  முத்து ராமன். பூனைபோல் இருக்கும் ரஜினி தனக்கு நேரும் கொடுமைகளை கண்டு பொங்கி எழுந்து தற்காப்பு கலைகளை கற்று கொண்டு புலி போல எதிரிகளை பந்தாடுவார்.

ரஜினியின் இந்த மாற்றத்தை அன்றைய ரசிகர்கள் பெரிதும் ரசித்தர்கள். படத்தின் இன்னொரு ஹீரோ சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்னம்தான். குங்பூ, கராத்தே கத்தி சண்டை என பல சண்டை காட்சிகளை சிறப்பாக வடிவமைத்திருப்பார் ரத்தனம். இந்த சண்டைக்காட்சிகள் பாயும் புலி படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.  படத்தில் வரும் கிளைமேக்ஸ் சண்டை காட்சி இன்று வரை தமிழ் சினிமாவில் முக்கிய சண்டை காட்சியாக இன்று வரை பார்க்கப்படுகிறது.

"பொத்து கிட்டு உத்தது வானம் " இளையராஜாவின் இசையில் அமைந்த இப்படத்தில் வரும்  பாடல் இன்று வரை பலரும் ரசிக்கும் பாடலாக உள்ளது.                              இந்த படத்தின் தாக்கதத்தால்  பலரும் காராத்தே, குங்பூ போன்ற தற்காப்பு கலைகளை கற்று கொள்ள ஆர்வம் காட்டினார்கள். பாயும் புலி - மக்கள் மனதில் இன்னும் பாய்ந்து கொண்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com