பராசக்தி திரைப்படத்திற்கு சென்சார் போர்ட் வைத்த செக் : திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல்..!

sivakarthikeyan's parasakthi movie
sivakarthikeyan's parasakthi movie
Published on

விஜயின் எதிர்பார்ப்பு மிக்க இறுதிப் படமான ஜனநாயகன் திரைப்படத்திற்கு கடும் போட்டியை கொடுக்கும் வகையில், தனது முந்தைய ரிலீஸ் தேதியை பராசக்தி திரைப்பட குழு மாற்றி வைத்தது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் பராசக்தி திரைப்படம் தணிக்கைக்கு சென்ற பிறகு , சென்சார் போர்டு பல காட்சிகளுக்கு பலத்த ஆட்சேபம் தெரிவித்துள்ளது. சென்சாரின் கடும் எதிர்ப்பால் ஜனவரி 10 ஆம் தேதி பராசக்தி திரைப்படம் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் முதல்முறையாக ரவி மோகன் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ரவி மோகன் , தனது ஹீரோ இமேஜ் பாதிக்காத வகையில் காட்சியமைப்புகள் இருக்க வேண்டும் என்று கடுமையான நிபந்தனைகளை விதித்திருந்தார். முதன்மை வேடத்தில் நடிக்கும் சிவ கார்த்திகேயன் அரசு அதிகாரியாக நடித்துள்ளார். அவரது தம்பியாக நடிக்கும் அதர்வாவிற்கு கல்லூரி மாணவன் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் மகளாக ஶ்ரீ லீலா நடித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படம் 1960-களில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டக் காலத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கதையில் பாசமிகு அண்ணன் தம்பிகளுக்குள் நடைபெறும் கருத்து மோதல்களும் , அழகான காதல் காட்சிகளும் , அன்றைய அரசியலை மையப்படுத்திய கதையாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்திருந்தது.

சுதா கொங்குரா இயக்கும் இந்த திரைப்படத்திற்கு , ஜி. வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் ஜி. வி. பிரகாஷ் இசையமைத்துள்ள 100 வது திரைப்படம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. தமிழகம் முழுக்க இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.

இந்நிலையில் தணிக்கைக்கு சென்ற பராசக்தி திரைப்படத்தில் ஹிந்தி எதிர்ப்பு குறித்து பல காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. தணிக்கை குழுவினர் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று படக்குழுவினரிடம் தெரிவித்து உள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சில அரசியல் வசனங்களும், ஹிந்தி எதிர்ப்பு தொடர்பான காட்சிகளும் தற்போதைய சமூக சூழலில் சலசலப்பை ஏற்படுத்தக்கூடும் என்று என தணிக்கை குழு கருதுகிறது.

குறிப்பாக, அரசு அதிகாரியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் பேசும் சில அனல் பறக்கும் வசனங்களை நீக்க வேண்டும் என்று சென்சார் போர்டு திட்டவட்டமாக கூறியுள்ளது. இந்நிலையில் படத்தின் முக்கிய காட்சிகளாக இருப்பதால் அவற்றை நீக்கினால் படத்தின் வீரியம் குறைந்துவிடும்" எனக்கூறி படக்குழுவினர் காட்சிகளை நீக்க மறுத்து வருகின்றனர். இதனால் படத்திற்கு சான்றிதழ் கிடைப்பதில் இழுபறி நீடிக்கிறது.

தற்போது படத்தை ரிவைசிங் குழுவுக்கு அனுப்பி, அங்கு தணிக்கை சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படம் திட்டமிட்டபடி ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜனநாயகன் திரைப்படத்திற்கு நெருக்கடி தரும் வகையில் வெளியாக இருந்த பராசக்தி திரைப்படத்திற்கு தணிக்கை பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் , விஜயின் ரசிகர்கள் தற்போது குஷியில் உள்ளனர். ஆனால் , பராசக்தி படக் குழுவினர் எப்படியும் படத்தை ஜனவரி 10 ஆம் தேதிக்கு வெளியிட்டே ஆக வேண்டும் தீவிர முடிவில் உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்; அவதார் பண்டோரா – ஜேம்ஸ் கேமரூன் படைத்த ஒரு மாயாஜால உலகம்!
sivakarthikeyan's parasakthi movie

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com