“பராசக்தி” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரொமோ வெளியானது..!

sivakarthikeyan's parasakthi movie
sivakarthikeyan's parasakthi movie
Published on

டான் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பராசக்தி.

பராசக்தி சிவகார்த்திகேயனின் 25-வது படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது. அதேசமயம் இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற வெற்றிப்படங்களை இயங்கிய சுதா கொங்கரா பராசக்தி படத்தை இயங்குவதால் இந்தப் படத்துக்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது எனறே சொல்லலாம்.

இந்த படத்தின் மூலம் முதன்முறையாக வில்லன் அவதாரம் எடுத்து அனைவரையும் மிரட்ட வருகிறார் ரவி மோகன்.

இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ராணா, பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் சிறப்பு என்னவென்றால் இப்படம் அவருக்கு 100வது படமாகும். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. இந்த படம் பொங்கல் பண்டிகையையொட்டி வரும் ஜனவரி 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் படத்தின் முதல் பாடலின் புரோமோ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோ இன்று (நவம்பர் 4-ம்தேதி) மாலை 5 மணிக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ‘பராசக்தி’ திரைப்படத்தின் முதல் பாடலின் புரொமோ சற்றுமுன் வெளியானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com