பார்க்கிங் விமர்சனம்!

பார்க்கிங் விமர்சனம்!

ஈகோ படுத்தும் பாடு!(3 / 5)

ம் அண்டை அயலாருடன் இருக்கும் சின்ன, சின்ன ஈகோக்களை மைய்யப்படுத்தி  வந்திருக்கும் படம் பார்க்கிங்.

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், பேஷன் ஸ்டூடியோஸ் பார்க்கிங் படத்தை தயாரித்துள்ளது.  அரசு வேலையில் இருக்கும் இளம் பரிதியின் (எம். எஸ். பாஸ்கர்) குடும்பமும், சாப்ட்வேர் நிறுவனத்தில்  செய்யும் ஈஸ்வரும்  (ஹரிஷ் கல்யாண்) அவரது மனைவியும்  ஒரே வீட்டில் வெவ்வேறு போர்ஷனில் வசிக்கிறார்கள். ஈஸ்வர் புதிய கார் ஒன்றை வாங்க வீட்டில்  பார்க்கிங் செய்வதில்  இளம்பரிதியுடன் பிரச்சனை வருகிறது. இந்த பிரச்சனையை சுற்றி கதை பின்னியிருக்கிறார் டைரக்டர். 

எம். எஸ்.பாஸ்கர் அடிப்படையில் குணசித்துர நடிகர். ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிப்பவர். இந்த இருவரும்  வித்தியாசமான வில்லத்தனமான நடிப்பில் அசத்தி இருக்கிறார்கள். பழைய ரேடியோ,மிக்ஸி என எதையும் மாற்றாமல் ரிப்பேர் செய்து ஓட்டுவது, எதிர்த்து கேட்கும் மனைவியை அடிப்பது, என ஆணாதிக்கம் கொண்ட நபரை கண் முன் கொண்டு வந்து விடுகிறார் பாஸ்கர். எமோஷனல் சமகால இளைஞராக இது வரை நாம் பார்க்காத ஹரிஷ் கல்யாணை இப்படத்தில் பார்க்கலாம்.

கணவனின் ஈகோவிற்க் கு  பலியாகும் ஒரு சராசரி தமிழ் பெண்மணியை ’என் உயிர் தோழன்’ ரமா நடிப்பில் பார்க்க முடிகிறது. படத்தின் முதல் காட்சியிலேயே, படத்தின் முடிவு என்ன என்பதை நம்மால் அனுமானம் செய்ய முடிகிறது. இருப்பினும் படம் நகரும் விதத்திலும், நம் வீட்டில், அண்டை வீடுகளில், நம் தெருக்களில் நடக்கும் விஷயம் என்பதால் நம்மால் ரசிக்க முடிகிறது.

"நான் கொஞ்சம் பொறுத்து போய் இருக்கலாம்,"அறுவது வயசுல கூட எனக்கு பக்குவம் வரல "என்ற வசனங்கள் நம் முன் வைக்கப்படும் கேள்வியை போல் உள்ளது. இன்றைய நகர் மயமாக்கலில் அண்டை அயலாரின் நடிப்பின் அவசியத்தை சொல்கிறது பார்க்கிங்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com