இன்ஸ்டாகிராமில் இணைந்த பவன் கல்யாண்.. சில மணி நேரத்திலேயே 1 மில்லியன் பாலோவர்ஸ்!

Pawan kalyan
Pawan kalyan

நடிகர் விஜய்யை போல இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய தெலுங்கு பிரபல நடிகர் பவன் கல்யாணுக்கு சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கில் பாலோவர்ஸ் குவிந்தனர்.

தமிழ் திரையுலகில் கொடி கட்டும் பறக்கும் விஜய், சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இல்லாம இருந்தார். ஆனால் இந்த ஆண்டு லியோ பட அறிவிப்புக்கு பிறகு திடீரென இன்ஸ்டாகிராமில் புதிய அக்கவுண்ட் ஓபன் செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதனை அறிந்த ரசிகர்கள் சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கில் பாலோ செய்து விஜய்யை வாயடைக்க செய்தனர்.

இதே போன்று தெலுங்கு திரையுலகிலும் தற்போது ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. விஜய்யின் சாதனையை முறியடித்து மில்லியன் கணக்கில் பாலோவர்களை பெற்றுள்ளார் நடிகர் பவன் கல்யாண். தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக விளங்குபவர், பவன் கல்யாண். இவரை, ரசிகர்கள் செல்லமாக பவர்ஸ்டார் என்று அழைப்பார்கள்.

தென்னிந்திய பிரபலங்களுக்கும், தென்னிந்திய சினிமாவின் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த முகமாக விளங்குபவர், பவன் கல்யாண். ஒரு பக்கம் சினிமா, இன்னொரு பக்கம் அரசியல் என பிஸியாக இருக்கும் நடிகர் இவர். இவர், தமிழில் வெளியான பல படங்களின் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் நடித்தவர் இவர்தான். தற்போது இவர் நடிப்பில் வெளியாகவுள்ள உஸ்தத் பகத் சிங் என்ற படமும் விஜய்யின் தெறி படத்தின் தெலுங்கு ரீ-மேக்தான் என கூறப்படுகிறது. இவர், சினிமாவில் மட்டுமல்லாது தனது பொது வாழ்க்கையிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மனிதர். இவருக்கென்று பல லட்சம் ரசிகர் பட்டாளமே உள்ளது. சமூக வலைதளங்கிலும் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ தற்போது இன்ஸ்டாகிராமிற்குள் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

பவன் கல்யாண் இன்ஸ்டாவில் இணைந்த தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் அவரை ஃபாலோ செய்ய தொடங்கினர். இவர் ஒரு போஸ்ட் கூட போட்டிராத நிலையில் கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேல் இவருக்கு ஃபாலோவர்ஸ் வந்துவிட்டனர். ஏற்கனவே உள்ள அவரது ட்விட்டர் பக்கத்தில் மட்டும் 5.3 மில்லியன் பின் தொடர்பாளர்கள் உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com