1969ம் ஆண்டு திருமுருகன் இயக்கத்தில், நாகேஷ், ஏ.வி.எம்.ராஜன், ஜானகி, ஸ்ரீதேவி (குழந்தை நட்சத்திரமாக) ஆகியோர் நடிப்பில் வெளியான படம் துணைவன். இப்படத்தின் ஒரு காட்சி உருவாக்கப்பட்ட விதத்தைக் கேட்டால் ஷாக் ஆகிருவீங்க.
பொதுவாக படப்பிடிப்பில் ஒரு சில காட்சிகளை எடுக்கும்போது மழை பெய்யும், பறவைகள் அழகாக பறக்கும். இதுபோல இயற்கை தானாக முன்வந்து உதவி செய்யும். செயற்கை மழையை வரவழைக்கக்கூட தேவை ஏற்படாது. நாயகன் படத்தில்கூட சரண்யாவுடன் கமல் பேசும் காட்சியில், புறாக்கள் அழகாக பின்புறம் இருக்கும். அது இயற்கையே உதவி செய்தது என்று படக்குழுவினர் சொல்லி நெகிழ்ச்சியடைந்தது உண்டு.
இப்படி இயற்கை உதவி செய்த உதாரணங்கள் ஏராளம். ஆனால், கடவுளே உதவி செய்த ஒரு விசித்திர உண்மையைதான் இப்போது நாம் பார்க்கவுள்ளோம்.
மருதமலை முருகன் கோவில் பற்றி தெரியாத தமிழர்களே இருக்க முடியாது. அந்தக் கோவிலில் துணைவன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதில் ஒரு காட்சியில் ஒரு குழந்தைப் படுக்க வைக்கப்பட்டிருக்கும். அந்த குழந்தையின் அருகே பாம்பு இருக்கும். அந்த பாம்பு குழந்தையிடம் செல்லாமல் மூன்று மயில் தடுக்கும். இதுதான் காட்சி.
அந்த மூன்று மயில்களை படக்குழுவினர் நன்றாக பயிற்சி அளித்து கொண்டுச் சென்றனர். பயிற்சியில் நன்றாக நடித்த மயில்கள், ஏனோ படப்பிடிப்பின்போது அசையவே மறுத்தன.
இயக்குநர் வெகுநேரம் போராடி, நேரம் போனதைப் பார்த்தும், மருதமலை கோவிலின் பெர்மிட் டைம் முடிவடையவுள்ளதை நினைத்தும் மிகுந்த வேதனையுடன் கோவிலின் கோபுரத்தைப் பார்த்து கைக்கூப்பி, கண்கலங்கி நின்று மனதார பிரார்த்தனை செய்தார். உடனே கோபுரத்தின் மீதிருந்த அக்கோவின் ஒரு மயில், தானாக பறந்து வந்து அந்தப் பாம்பை குழந்தை அருகே வரவிடாமல், தடுத்து சண்டையிட்டது. அதை அப்படியே படம்பிடித்தனர். அதே காட்சிதான் நாம் இப்போது பார்க்கும் துணைவன் படத்திலும் உள்ளது.
இந்தக் காட்சியை மட்டும் பாருங்களேன்… மயில் உண்மையாகவே பாம்புடன் சண்டைப்போட்டது தெரியும். இது முருகனின் அருளா? அல்லது இயற்கையின் பரிசா?