சமூகத்தின் ஏற்ற தாழ்வினை கிழித்தெறியும் “பேரன்பும் பெருங்கோபமும்” !

சமூகத்தின் ஏற்ற தாழ்வினை  கிழித்தெறியும்  “பேரன்பும் பெருங்கோபமும்”  !

Vau Media Entertainment தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கி வரும் படம் “பேரன்பும் பெருங்கோபமும்”. இப்படத்தில் நாயகனாக புதுமுகம் விஜித் நடிக்கிறார். இப்படத்தின் நாயகியாக, செங்கலம் வெப் சீரிஸ்'ல் நாச்சியாராக நடித்து பலரது பாராட்டுகளை வாங்கிய ஷாலி நிவேகாஸ் நடிக்கிறார். தயாரிப்பாளர் துரை வீரசக்தி இப்படத்தை தயாரித்துள்ளார்.

இவர்களோடு MIME கோபி, அருள் தாஸ், சுபத்ரா, விஜய் டிவி தீபா, சாய் வினோத் மற்றும் நடிகர் கதிரின் தந்தை லோகு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு JB தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமர், படத்தொகுப்பு செய்துள்ளார்.

தமிழ் திரை வரலாற்றில் சமூகத்தின் ஏற்றதாழ்வை, புரையோடி நிற்கும் முக்கிய பிரச்சனையை அழுத்தமாக சொல்லும் அற்புதமான படைப்பாக உருவாகி வருகிறது இப்படம். இப்படி சிந்தனை உள்ள ஒரு சாமானியனை பற்றிய கதைதான் இந்த திரைப்படம்.

இரு குழந்தைகளை காணவில்லை என ஆரம்பிக்கும் விசாரணை, பல அதிர்ச்சியான திருப்பங்களுக்குள் நம்மை இழுத்து செல்கிறது. 1998, 2000, 2022 என மூன்று காலகட்டங்களில் இப்படத்தின் கதை நடக்கிறது.

மூன்று காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால் , புது முக நடிகர் விஜித் மற்றும் நாயகி ஷாலி நிவேகாஸ் என இருவருமே இப்படத்தில் மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.

விடுதலை படத்திற்கு பிறகு இத்திரை படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தை இயக்கிவரும் சிவபிரகாஷ், பாலு மகேந்திராவின் சினிமா பட்டறை மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com