
விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து, இயக்கி எடிட்டிங் செய்து வெளிவந்துள்ள படம் பிச்சைக்காரன்-2 திரைப்படம்.
உலக மகா பணக்காரர்களில் ஒருவரான விஜய் குருமூர்த்தியை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க விஜய்க்கு மூளை மாற்று அறுவை சிகிக்சை செய்ய முடிவு செய்து சத்யா என்ற பிச்சைகார இளைஞனின் மூளையை விஜய் குருமூர்த்திக்கு வைத்து விடுகிறார்கள். சத்யாவுக்கு தன் சொந்த தங்கையை தொலைத்து தேடும் ஒரு பிளாஷ் பேக் இருக்கிறது. சத்யா கூட்டாளிகள் மூவரையும் கொன்று விடுகிறார். ஆன்டி பிகில் என்ற நலதிட்டம் மூலம் ஏழை மக்களுக்கு உதவிகள் செய்கிறார். இதனால் கோபம் கொள்ளும் முதலமைச்சர் சத்யாவின் சொத்துக்களை அபகரிக்க முயற்சிக்கிறார். இதில் யார் வெற்றி பெற்றார் என்பது மீதிக்கதை.
மூளை மாற்றம் என்ற அறிவியல் ஒன் லைன் பல சுவாரசியமான திரைக்கதை அமைக்க போதுமானது. ஆனால் தங்கை செண்டிமெண்ட், ஏழை மக்களுக்கு உதவுவது என்ற பழைய ரூட்டில் செல்வதால் சுவாரசியம் இல்லாமல் செல்கிறது திரைக்கதை. மாஸ் ஹீரோக்கள் கூட மறந்து போன 90களின் மாஸ் விஷயங்களை நம்பி களம் இறங்கி உள்ளார் விஜய் ஆன்டனி. இந்த விஷயம் எதுவும் இவருக்கு பொருத்தமாகவே இல்லை. விஜய் ஆன்டனியின் நடிப்பு பல இடங்களில் ஓவர் ஆக்ட்டிங் ஆக உள்ளது.
ஹீரோயின் காவ்யா தாப்பர் வந்து போகிறார். யோகிபாபு இருந்தும் சிரிப்பு வரவில்லை. விஜய் ஆன்டனியின் பின்னணி இசையும், எடிட்டிங்கும் சரியாக உள்ளது. பிச்சைக்காரர்கள் யார் ஏழை எளிய மக்கள் யார் என்ற சரியான புரிதல் கூட இல்லாமல் பல காட்சிகள் படத்தில் வந்து போகின்றன.