பொங்கல் வின்னர் ஸ்ருதி ஹாசன் - இரண்டு படங்களும் தலா ரூ.100 கோடிக்கு மேல் வசூல்!

பொங்கல் வின்னர் ஸ்ருதி ஹாசன் - இரண்டு படங்களும் தலா ரூ.100 கோடிக்கு மேல் வசூல்!
Published on

உலக நாயகன் கமலஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். இவர் பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறன் கொண்டவர்.

 2011இல் சூர்யா நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதன் பின் வரிசையாக பல படங்களில் நடித்தார். அஜித்துடன் ‘வேதாளம்’, ‘விஜயுடன் ‘புலி’ மற்றும் விஜய்சேதுபதி, விஷால், தனுஷ் ஆகியோருடன் நடித்து தமிழல் பிரபலம் ஆனார்.

அதன் பின் தெலுங்கு படங்களில் அறிமுகம் ஆனார். தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்திருந்தார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது 'கேஜிஎஃப்' இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக 'சலார்' படத்தில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த வாரம் தெலுங்கில் வெளியான பாலகிருஷ்ணாவுடன் 'வீர சிம்ஹ ரெட்டி', தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் 'வால்டர் வீரய்யா' ஆகிய இரண்டு பெரிய படங்களிலும் ஸ்ருதி ஹாசன்தான் கதாநாயகி. இரண்டு தெலுங்குப் படங்களும் வெளியான நான்கு நாட்களில் தலா ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

பாலகிருஷ்ணா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஸ்ருதி ஹாசன் சிரஞ்சீவி படத்தின் புரமோஷனில் கலந்துக் கொள்ளவில்லை என கேள்வி எழுந்தது. பின்னர் அவருக்கு காய்ச்சல் என இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார்.

சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ திரைப்படம் வெளியாகி 4 நாளில் உலகம் முழுவதும் ரூ.108 கோடி வசூலாகியுள்ளது. பாலகிருஷ்ணா நடித்த ‘வீர சிம்ஹ ரெட்டி’ உலகம் முழுவதும் 4 நாள்களில் ரூ.104 கோடியும் வசூலானதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மொத்தமாக இரண்டு படங்களையும் சேர்த்து ரூ.200 கோடிக்கும் மேல் வசூலாகியுள்ளது. இதனால் ஸ்ருதி ஹாசனுக்கு அடுத்தடுத்து தெலுங்கில் நடிக்க வாய்ப்புகள் வந்துக்கொண்டிருக்கின்றன.

இந்த வகையில் உண்மையான பொங்கல் வின்னர் ஸ்ருதி ஹாசன்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com