காதலர் தினத்தில் பொன்னியின் செல்வன் – 2 படத்தின் முதல் பாடல் வெளியீடு!

காதலர் தினத்தில் பொன்னியின் செல்வன் – 2 படத்தின் முதல் பாடல் வெளியீடு!
கார்த்திகா வாசுதேவன்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் - 1’ முதல் பாகம் நாவல் வாசிக்காதவர்களிடையே ஏராளமான எதிர்பார்ப்புகளைக் கிளப்பி விட்டு ஒரு திரில்லுடன் முடிந்த நிலையில் 2K கிட்ஸ்கள் என்று சொல்லப்படக் கூடிய இன்றைய இளைய தலைமுறையினரிடையே இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அவர்கள் பொன்னியின் செல்வன் அப்டேட்டுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள்.

கல்கியின் பொன்னியின் செல்வனை நாவலாக வாசித்தவர்களுக்கு முன்பே தெரிந்திருக்கும் அருண்மொழியின் மீது காதலாகி கசிந்துருகிக் கொண்டிருந்த இரு பெண்களைப் பற்றி. அவர்களில் வானதி அரச குலத்தைச் சேர்ந்த பெண், பூங்குழலி சாதாரண படகோட்டி. ஆயினும் இளவரசர் உண்மையில் மணந்து கொள்ள ஆசைப்பட்டது இவளைத்தான் என்பதாகத் தான் கதையின் போக்கு இருக்கும். ஆயினும் அரசர்கள், இளவரசர்கள், இளவரசிகளின் திருமணங்களைத் தீர்மானிப்பதில் காதலுக்கு எப்போதுமே முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்பதற்கு வரலாற்றில் அனேக உதாரணங்கள் உண்டு.

ஃபிப்ரவரி 14 உலகம் முழுவதும் காதலர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது என்பதால் பொன்னியின் செல்வரின் காதலை மையமாக வைத்து வெளியிடப்படும் முதல் பாடலை அந்நாளில் வெளியிட படக்குழு தீர்மானித்திருப்பதாகத் தகவல்.

படத்தில் அருண்மொழியாக நடித்திருக்கும் ஜெயம் ரவி, வானதியாக நடித்திருக்கும் நடிகை சோபிதா தூலிபாலாவுடன் ரொமான்ஸ் செய்யப்போகிறாரா? அல்லது பூங்குழலியாக நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா லெட்சுமியுடன் ரொமான்ஸ் செய்யப்போகிறாரா? என்பது பாடல் வெளியானதும் தெரியும்.

காதலர் தினத்தில் பாடல் வெளியீடு குறித்தான அதிகாரப்பூர்வமான தகவலை விரைவில் எதிர்பார்க்கலாம்.

இத்திரைப்படத்தை தயாரித்திருக்கும் லைகா நிறுவனமும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்து அந்த அறிவிப்பை விரைவில் செய்வார்கள்.

logo
Kalki Online
kalkionline.com