மாஸ் வீடியோவுடன், 'பொன்னியின் செல்வன்-2' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மாஸ் வீடியோவுடன், 'பொன்னியின் செல்வன்-2' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

கடந்த செப்டெம்பர் மாதம் 30ம் தேதியன்று, உலக அளவில் பிரம்மாண்ட படைப்பாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம்தான் 'பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று' (PS-1). இந்நிலையில் தற்போது 'பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்' (PS-2) வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அமரர் கல்கியின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதுதான் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம். உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இத்திரைப்படம் 500 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்க, லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது.

கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன் என ஒரு மாபெரும் நடிகர் பட்டாளமே நடித்திருந்தது. பெரும் சரித்திர நாவலான 'பொன்னியின் செல்வன்' கதையை ஒரே பாகத்தில் சொல்லி விட முடியாதென்பதால், அதை 2 பாகங்களாக மணிரத்னம் உருவாக்கியுள்ளார். அதன்படி பொன்னியின் செல்வன் 2ம் பாகத்திற்கான படப்பிடிப்பு வேலைகளும் ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில் 2023ம் ஆண்டு கோடை விடுமுறையில் 'பொன்னியின் செல்வன்-2' ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் இன்று வெளியாகும் என லைகா நிறுவனம் நேற்று அறிவித்திருந்த நிலையில் தற்போது 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படத்தின் மாஸ் வீடியோவுடன் ரிலீஸ் தேதியும் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com