"பயப்படாதே புது பிரபஞ்சம் வந்துகிட்டு இருக்கு" மாஸாக வெளியானது கல்கி 2898 ஏடி பட ட்ரைலர்.. எப்படி இருக்கு?

கல்கி 2898 ஏடி
கல்கி 2898 ஏடி

நாடெங்கும் ரசிகர்கள் பேராவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் கல்கி 2898 AD படத்தின் டிரெய்லர் வெளியாகி ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ படமாக உருவாகி வரும் கல்கி படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமலஹாசன், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்துள்ளனர். இது சூப்பர் ஹீரோ படமாக அதிக பட்ஜட்டில் உருவாகி வருகிறது என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

கலியுகத்தில் கிருஷ்ணன் அவதாரத்தைத் தழுவியும் இந்தப் படத்தை எடுத்திருப்பதாக செய்திகள் வந்தன. இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக இப்படம் இந்த ஆண்டு மே மாதம் 9ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. ஆனால் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில்தான் படத்தின் பாடல் காட்சிகளும் விட்டுப்போன சில காட்சிகளும் படம்பிடிக்கப்பட்டன. இந்தப் படப்பிடிப்பிற்காகப் படக்குழு இத்தாலி சென்று வந்தது. படப்பிடிப்பு ஒருபக்கமும் மறுபக்கம் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்தன. இந்த படத்தின் வெளியீட்டுத் தேதி சமீபக்காலமாக பல காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. ஒருவழியாக ஜூன் 27ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிப்பதால் இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கி உள்ளார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

ட்ரைலர் எப்படி இருக்கு?

பிறக்காத ஒரு குழந்தைக்காக ஏன் போராட வேண்டும் என அனைவரும் குமுற, அபிஷேக் பச்சன் மட்டும் அது பிறந்தே ஆக வேண்டும் நான் காப்பாற்றுவேன் என கூறுகிறார். அந்த குழந்தை பிறந்துவிட்டால் எல்லாமே சரியாகிவிடும் என அனைவரும் நம்புகின்றனர். அறிவியல் மற்றும் எதிர்காலத்தில் நடக்கும் சம்பவங்களை புராணத்தை அடிப்படையாகக் கொண்டு கல்கி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கல்கி படத்தில் வில்லனாக கமல்ஹாசன் இடம் பெற்றுள்ளார். இவரது கேரக்டர் குறித்த எந்த போஸ்டரும் வெளியாகாத நிலையில் ட்ரெய்லரின் இறுதி சில வினாடிகளில் கமல்ஹாசன் இடம் பெற்றுள்ளார். அதுவும், பயப்படாதே புது பிரபஞ்சம் வந்துகிட்டு இருக்கு என்ற மாஸான டயலாக்கை கூறி அனைவரையும் மெய்சிலிர்க்க செய்கிறார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், அனைவரும் படத்தின் ரிலீசை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com