வருங்கால மனைவிக்காக 200 கோடி ரூபாய் மதிப்பில் காதல் கோட்டை கட்டும் பிரபாஸ்..!!

பாக்ஸ் ஆபிஸ் மன்னனின் காதல் கோட்டை! பிரபாஸின் 200 கோடி ரூபாய் கனவு இல்லம்!
Prabhas construct new house for his marriage
Prabhas dream bunglow x ,AI
Updated on

பாகுபலி நடிகரான பிரபாஸ் தனது எதிர்கால மனைவிக்காக மிகப்பெரிய அளவில் ஒரு பங்களாவை ஹைதராபாத்தில் கட்டிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் , டோலிவுட் டவுனின் ஹாட் டாபிக்காக இருக்கிறது. 45 வயதினை கடந்த பிரபாஸ் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

தெலுங்கு திரை உலகின் பான் இந்தியா ஸ்டாராக விளங்கி வருபவர் ரிபல் ஸ்டார் பிரபாஸ். இன்று தெலுங்கு மட்டுமல்லாமல் உலகளவில் தனக்கென்று பெரிய ரசிகர் கூட்டத்தையும் வைத்திருக்கிறார். தென்னிந்திய சினிமாவிலிருந்து 1000 கோடி ரூபாய் மார்க்கெட்டை வைத்துள்ள முதல் நடிகர் என்ற பெருமையும் அவரையே சாரும்.

தென்னிந்திய நடிகர்களில் 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸை இரண்டு முறை தொட்ட நடிகராகவும் அவர் மட்டுமே இருக்கிறார். இந்திய திரையுலகின் தவிர்க்க முடியாத சக்தியாக இன்று வளர்ந்து நிற்கிறார்.

பிரபாஸ் தனது திரையுலக வாழ்க்கையில் ஆரம்ப காலகட்டத்தில் அதிரடியான திரைப்படங்களில் நடித்து தனக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருந்தார். கிட்டத்தட்ட நூறு கோடிக்கும் குறைவாக இருந்த அவரது சராசரி தெலுங்கு மார்க்கெட் , பாகுபலி திரைப்படங்களின் மூலம் மிகப்பெரிய அளவில் விரிந்தது. எஸ்.எஸ். ராஜமவுலியின் இயக்கத்தில் வெளியான 'பாகுபலி: தி பிகினிங்' (2015) மற்றும் 'பாகுபலி 2: தி கன்குளூஷன்' (2017) படங்கள் ஆகிய திரைப்படங்கள் 2000 கோடிக்கும் மேற்பட்ட வசூலை வாரி குவித்து உலக அளவிலும் பிரபாஸை கொண்டு சேர்த்தன.

பாகுபலி 2 திரைப்படம் மட்டுமே ₹1810 கோடிக்கும் அதிகமாக வசூலித்து திரை உலகின் புதிய சூப்பர் ஸ்டாராக பிரபாஸை நிலை நிறுத்தியது. இதையடுத்து இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக அவர் இருக்கிறார். ஆனாலும் இவர் வாங்கும் சம்பளத்தின் அளவு கோலிவுட் மற்றும் பாலிவுட் நடிகர்களை விட சற்று குறைவாக இருக்கிறது என்பது கூடுதல் தகவல். ஆனாலும் பிரபாஸ் படத்தின் வசூல் எப்போதும் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தினை அதிகமாக கொடுப்பதாகவே இருக்கிறது.

prabhas dream house
prabhasx

பாகுபலி திரைப்படத்திற்கு பின்னர் கல்கி 2898 AD திரைப்படமும் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி 1000 கோடிக்கும் மேல் வசூலை வாரிக் குவித்துள்ளது. இந்த திரைப்படத்தின் 2 வது பாகமும் இதைவிட பெரிய அளவில் வசூலிக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.

இந்தியாவிலே பெரிய நடிகராக இருந்தாலும் இதுவரை பிரபாஸ் திருமணம் செய்து கொள்ளாதது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. பாகுபலி திரைப்பட காலகட்டத்தில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா காதலித்து வருவதாக செய்திகள் பரவி வந்தது. ஆனால், இந்த செய்தியை இருவரும் மறுத்து வந்துள்ளனர்

அதற்குப் பின்னர் ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகளை பிரபாஸ் திருமணம் செய்ய இருப்பதாகவும், அதற்காக மிகப் பிரம்மாண்டமான ஒரு மாளிகையை கட்டி வருவதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது 2 ஏக்கர் பரப்பளவில் ₹200 கோடி மதிப்பில், மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் மிக்க ஒரு மாளிகையை அவர் கட்டி வருகிறார். இந்த வீட்டில் திருமணத்திற்கு பின்னர் அவர் குடியேற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனாலும், பிரபாஸ் யாரை காதலிக்கிறார்? அவர் திருமணம் செய்து கொள்ள போகும் பெண் யார்? என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

logo
Kalki Online
kalkionline.com