10 கெட்டப்புகளில் பிரபுதேவா கலக்கும் ‘பஹிரா’ நாளை ரிலீஸ்!

10 கெட்டப்புகளில் பிரபுதேவா கலக்கும் ‘பஹிரா’  நாளை ரிலீஸ்!

தென்னிந்தியாவில் பிரபல நடன இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பவர் பிரபுதேவா. அவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘பஹிரா’.

பரதன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.இப்படம் நாளை மார்ச் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்களிப்பிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளறிவருகிறது. த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தின் டீஸர் வெளியாகியபோதே வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

காதல் மற்றும் நகைச்சுவை திரைக்கதையில் உருவாகும் இப்படத்தினை ஒளிப்பதிவாளர் அபிநந்தன் இராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ரூபன் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை 2020 காதலர் தினத்தை முன்னிட்டு பிப் 14ல் இணையத்தில் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் 10-க்கும் மேற்பட்ட வித்தியாசமான கெட்டப்புகளில் பிரபுதேவா நடித்துள்ளார். அதனால் பிரபுதேவாவிற்கு ஜோடியாக அமைரா தஸ்தூர், சோனியா அகர்வால், சஞ்சிதா ஷெட்டி, சாக்ஷி அகர்வால், ஜனனி ஐயர், காயத்ரி என 6 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். பெண்களை காதலில் விழ வைக்க, சைக்கோவாக மாறும் பஹிராவின் கதைதான் இந்த படம்.

‘மை டீயர் பூதம்’, ‘பொய்க்கால் குதிரை’ படங்களைத்தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பஹிரா’. இந்தப் படத்தை ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘ஏஏஏ’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

இப்படத்திற்கு கணேசன் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டே வெளியாகவிருந்த இந்த படம் சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படம் வரும் மார்ச் 3-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com