ரீ ரிலீசாகும் பிரேமம் படம்.. ரசிகர்கள் குஷி!

பிரேமம்
பிரேமம்

சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பிரேமம் படம் ரீ ரிலீசாகவுள்ளது.

ரஜினியின் பாபா, முத்து, கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான் படங்கள் தான் இந்த ட்ரெண்டை தொடங்கி வைத்தன. இதனால் சூர்யாவின் வாரணம் ஆயிரம் படமும் ரீ-ரிலீஸாகியுள்ளது. அதேபோல் தனுஷின் 3, மயக்கம் என்ன படங்களும் சமீபத்தில் மீண்டும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

ஆனாலும், கமலின் வேட்டையாடு விளையாடு மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் ஓரளவு வசூல் செய்தது. இருப்பினும் ரீ-ரிலீஸாகும் படங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகின்றன.

மலையாளத்தில் 2015ம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்த இந்தப் படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்தார்.

தமிழகத்தில் அந்த காலகட்டத்தில் மலையாள படத்திற்கு கிடைத்த அதிக ரீச் என்றால் அது இந்த படம் தான். மலையாளத்தில் வெளியான பிரேமம் தமிழ், தெலுங்கு ரசிகர்களிடமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. சென்னையில் 100 நாட்களுக்கும் அதிகமாக ஓடி சாதனை படைத்தது பிரேமம். தமிழில் சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படத்தின் அப்டேட் வெர்ஷனாக தான் பிரேமம் உருவாகியிருந்தது.

இந்நிலையில் பிரேமம் படத்தை தமிழ்நாட்டில் ரீ ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதன்படி அடுத்த மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு பிரேமம் திரைப்படம் மீண்டும் வெளியாகவுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com