96வது ஆஸ்கர் விருது பட்டியல்.. 13 பிரிவுகளில் ஓபன் ஹெய்மர்.. ரசிகர்கள் குஷி!

 96th Oscars
96th Oscars
Published on

ஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.96ஆவது ஆஸ்கர் விருது விழா வரும் மார்ச் 10ஆம் தேதி அமெரிக்காவில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. அந்த விருது விழா போட்டிக்கான அதிகாரப்பூர்வ இறுதி பரிந்துரை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

அதில், கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓபன்ஹெய்மர் 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பார்பி, கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன், பூவர்ஸ் திங் உள்ளிட்ட படங்களும் அதிக பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

Presenting the nominees in every category for the 96th #Oscars
Presenting the nominees in every category for the 96th #Oscars

2023ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் ஜார்கண்ட்டில் 13 வயது குழந்தைக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'To Kill a Tiger' என்ற ஆவணப்படம் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் பிறந்த இயக்குநர் நிஷா பஹுஜா இயக்கிய கனட நாட்டுத் தயாரிப்பான 'To Kill a Tiger' சிறந்த ஆவணப்படம்' பிரிவில் இடம்பெற்றுள்ளது.

To Kill a Tiger
To Kill a Tiger

ஜார்கண்ட்டைச் சேர்ந்த விவசாயி, பாலியல் கொடுமைக்கு ஆளான தனது 13 வயது மகளுக்கு நீதி கேட்கும் போராட்டத்தை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பல விருதுகளை வென்ற இந்த ஆவணப்படம் ஆஸ்கரை வெல்லுமா என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறந்த அசல் திரைக்கதையாக அனாடமி ஆஃப் எ ஃபால்’ (Anatomy Of A Fall), பாஸ்ட் லைவ்ஸ் (Past Lives), மேஸ்ட்ரோ (Maestro), ஹோல்டோவர்ஸ் (The Holdovers), மே டிசம்பர் (May December) ஆகிய படங்களும், சிறந்த தழுவல் திரைக்கதையாக அமெரிக்கன் ஃபிக்ஷன், பார்பி, ஓபன்ஹெய்மர், புவர் திங்க்ஸ், தி ஜோன் ஆஃப் இன்டர்ஸ்ட் ஆகிய படங்களும் தேர்வாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com