கரண் ஜோஹரை கட்டியணைத்த பிரியங்கா! சண்டைக்குப்பின் சமரசமா?

கரண் ஜோஹரை கட்டியணைத்த பிரியங்கா! 
சண்டைக்குப்பின் சமரசமா?
Published on

பாலிவூட்டின் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தைப் பெற்ற பிரபலம் பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் சென்று செட்டிலாகிவிட்டார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் “இந்தி திரைத்துறையில் ஓரம் கட்டப்பட்டேன். யாரும் வாய்ப்புக் கொடுக்க முன்வரவில்லை. எனவே, இந்தி சினிமாவிலிருந்து விலகி விட்டேன். அங்கு நடக்கும் அரசியல் விளையாட்டு எனக்குப் பிடிக்காமல் போன சமயம்தான் ஹாலிவுட் வாய்ப்பு வந்தது” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தனது டிவிட்டரில் கூறியதாவது: “பிரியங்கா சோப்ரா ஓரம் கட்டப்பட்டதாக தெரிவித்ததற்கு காரணம் கரண் ஜோஹர் ஆவார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவை விட்டு செல்லும்படி செய்துவிட்டார் கரண்.”

இச்செய்திகள் நெட்டிசன்களை கவலைப்பட வைத்தது. கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தன்னுடைய கணவரும் பாடகருமான நிக் ஜோனஸூடன் நீதா முகேஷ் அம்பானியின் கலாசார மையத்தின் திறப்பு விழாவுக்காக அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார் பிரியங்கா சோப்ரா.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கரண் ஜோஹரை சந்தித்த பிரியங்கா சோப்ரா திடீரென அவரைக் கட்டியணைத்து மகிழ்ந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இவர்களிருவரும் சிரித்துப் பேசி மகிழ்ந்ததைக் கண்ட ரசிகர்கள் பார்த்து வியந்துள்ளனர்.

பிரியங்கா சோப்ரா நடித்த ‘Love Again’ ஹாலிவுட் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!

(சினிமா உலகமென்பது சண்டைக்குப் பின் சமரசம் என்பதுதானோ!)

KKB KKJ

மீண்டும் பதுக்கம்மா!

வரும் Eid (ஈத்) பண்டிகை தினத்தன்று பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிக்கும் சல்மான்கான் நடிக்கும் ‘Kisi Ka Bhai! Kisi Ki Jaan’ வெளியிடப்பட உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் 9 நாட்கள் பூக்களின் திருவிழா அமோகமாக இருக்கம். இது ‘பதுக்கம்மா’ விழா என்று அழைக்கப்படுகிறது.

‘பதுக்கம்மா’வைக் குறிக்கும் பாடல் ஒன்று 28 வருடங்களுக்கு முன்பு தென்னிந்திய சூப்பர் ஸ்டார் வெங்கடேஷ் (தெலுங்கு நடிகர்) நடித்த படத்திலுள்ளது. இதை சல்மான்கானிடம் வெங்கடேஷ் கூற, அப்புறமென்ன?

கிஸி கா பாயி! கிஸி கி ஜான் படத்தில் ‘பதுக்கம்மா’ திரும்ப வந்துள்ளது. கால்களினால் தாளம் போட வைக்கும் பாடல் காட்சியில் சல்மான்கான், வெங்கடேஷ் உடன் நடிக்கும் நடிக – நடிகைகள் மற்றும் 200 நடனக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். சென்ற வருடம் பதுக்கம்மா திருவிழா நடக்கும் சமயம், பாடல் காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமா (2014) ‘வீரம்’ படத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. ‘KKB KKJ’. நான்கு சகோதரர்கள் மூத்த அண்ணாவுக்குத் திருமணம் செய்து வைக்க, மற்ற மூவர் பாடுபடும் கதை.

பதுக்கம்மா பாடலை கம்போஸ் செய்தவர் இசை இயக்குனர் ரவி பாஸ்ரூர். ஆந்திராவின் கலாசாரம் இப்பாடல்மூலம் வெளிப்படுமென கூறப்படுகிறது. பட்டு வேஷ்டி, சட்டை அங்கவஸ்திரமென காஸ்ட்யூம் அமர்க்களமாக இருக்கிறது.

பணக்கார அழகு

ப்ராண்ட் பட்டியல் – சாதனை!

காஸ்மேட்டிஃபை (Cosmotify) என்ற நிறுவனத்தின் சார்பில் உலக அளவில் பிரபலங்களுக்குச் சொந்தமான  ப்ராண்டுகள் (Brands) எவை என்ற பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலின் இரண்டாவது இடத்தில், நடிகை பிரியங்கா சோப்ராவின் தலைமுடி பராமரிப்பு Brand ஆன Anomaly (அனோமலி) 429.9 மில்லியன் பவுண்டுகளுடன் வருவாய் அடிப்படையில் பணக்கார Brands என்ற பெருமையைப் பெற்று நிற்கிறது.

கடந்த ஆண்டு தனது Hair care நிறுவனத்தை நிறுவிய பிரியங்கா, Brand பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது புது சாதனை எனலாம்.

லண்டனை தளமாக கொண்ட Cosmotify நிறுவனம் கூறியுள்ளதாவது “ஒரு Brandஇன் வெற்றியை அளவிட பல வழிகள் உள்ளன என்றாலும் அதில் வருவாய் மிக முக்கியம். சமீபத்திய ஆண்டு வருவாய் அடி்பபடையில் பணக்கார அழகு ப்ராண்ட்’ பட்டியலை வெளியிட்டுள்ளோம்” என்பதாகும்.

(சாதனை மேல் சாதனை! தொடரட்டும்!)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com