சைக்கலாஜிகல் த்ரில்லர் "இரட்ட"!

- திரை விமர்சனம்!
சைக்கலாஜிகல் த்ரில்லர் "இரட்ட"!

அறிமுக இயக்குநர் ரோகித் எம்ஜி கிருஷ்ணன் எழுதி இயக்கியிருக்கும் மலையாளத் திரைப்படம் இரட்ட (Iratta). இதில் இரட்டையராக இரு கதாப்பாத்திரத்தில் கலக்கியிருப்பவர் ஜோஜூ ஜார்ஜ்.

Iratta க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவான இத்திரைப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்து வருகிறது.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள Iratta படத்தின் தமிழ் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

இரட்டையர்களான ப்ரோமோத்தும் வினோத்தும் சிறு வயதிலேயே குடும்ப சூழல்காரணமாக பிரிந்துவிடுகின்றனர். காலம் அவர்களை மீண்டும் இணைக்கிறது, அண்ணன் ப்ரோமோத் டிஎஸ்பி-யாகவும், தம்பி வினோத் ஏஎஸ்ஐ-யாகவும் ஒரே போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்க்கும் சூழல் ஏற்படுகிறது. ஆனால், சிறுவயதில்இருந்த அந்த? பாசம் இப்போது இல்லை, ப்ரோமோத் மீது கொலை வெறியோடுஅலைகிறான் வினோத். அதற்கான காரணம் என்னவென்பதை சில காட்சிகளில் அழுத்தமாக பார்க்க முடிகிறது. வினோத்தின் கேரக்டர் கொஞ்சம் சைக்கோதனமானது.

போலீஸ் ஸ்டேஷன் முன்பு ஒரு நிகழ்ச்சிக்காக ஊரே கூடி நிற்கிறது. அந்நேரம்ஸ்டேஷன் உள்ளிருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம், மூன்று குண்டுகள் உடலை சிதைத்தவாறு வினோத் உயிரிழந்து கிடக்கிறான். வினோத் மரணத்தின் போது ஸ்டேஷன் உள்ளே இருந்த மூன்று போலீஸார் மீது சந்தேகம், கூடவே சகோதரன் ப்ரோமோத் மீதும் சந்தேகம் எழுகிறது.

வினோத்தை கொலை செய்தது யார் என விசாரணை தொடங்குகிறது. மூன்றுபோலீஸாரும் ஒவ்வொரு கோணத்தில் சம்பவத்தை விவரிக்கின்றனர், கூடவேஅவர்களுக்கும் வினோத்துக்கும் இருந்த முன் பகையையும் சொல்ல வேண்டியநிர்பந்தம். அதில் வினோத்தின் சில அதிர்ச்சியான மறுபக்கங்கள் தெரிய வருகிறது. ஒருகட்டத்தில் ப்ரோமோத் இந்த விசாரணையை கையில் எடுக்கிறார், தொடங்கியவேகத்தில் எல்லாம் முடிவுக்கு வருகிறது. வினோத் மரணம் எப்படி நடந்ததுஎன்பதை அதற்கான சாட்சியங்களோடு விளக்கம் கொடுக்கிறார்.

இறுதியாக வருகிறது அந்த திடுக்கிடலுடன் கூடிய ட்வீஸ்ட். வினோத் மரணத்தின் பின்னணி என்னவென்பது ப்ரோமோத்துக்கு மட்டுமே தெரியவருகிறது. அந்த நிமிடத்தில் நம் நெஞ்சமும் அதிர்ச்சியில் உறைந்து விடுகிறது. மொத்தத்தில் இது க்ரைம் த்ரில்லர் அல்ல ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வகை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com