நாளை வெளியாகவுள்ள மாமன்னன் திரைப்படம் திரையிட தடை விதிக்க வேண்டும் என கோரிய பொதுநல மனு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
பாளையங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், நான் பாளையங்கோட்டையில் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவன் . ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ் . இவர் தேவேந்திகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர் .
இயக்குநர் மாரி செல்வராஜ் தொடர்ந்து சாதி ரீதியாக வன்முறையை தூண்டும் வகையில் திரைபடங்களை இயக்கி வருகிறார். இதற்கு முன்னர் பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கினார் . அந்த படங்களில் தேவர் சமுதாயத்தினருக்கும் , தேவேந்திகுல வேளாளர் சமுதாயத்தினருக்கும் கடந்த காலங்களில் ஏற்பட்ட கலவரங்களை குறிப்பாக கர்ணன் திரைப்படத்தில் கொடியங்குளம் எனும் கிராமத்தில் நடைபெற்ற சாதி மோதல் கலவரங்களை மையப்படுத்தி இயக்கியிருந்தார்..
கொடியங்குளம் சுலவரம் நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது . அந்த கலவரத்தை மறந்த தற்போது தேவர் சமுதாயத்தினரும் , தேவேந்திர குல சமுதாயத்திளரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.
இப்படி ஒரு கலவரம் நடந்த விஷயமே தற்போதைய இளம்தலைமுறையினருக்கு தெரியாமல் இருந்தது . ஆனால் மேற்படி மாரிசெல்வராஜ் கருத்து சுதந்திரம் மற்றும் கலை என்ற பெயரில் கொடியங்குளம் கலவரத்தை மையப்படுத்தி கர்ணன் திரைபடத்தை இயக்கி வெளியிட்டு அதன் மூலமாக மீண்டும் தென்மாவட்டங்களில் இரு சமுதாயத்தினரிடையே ஒரு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி வைத்துள்ளார் .
எப்போது பார்த்தாலும் தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் தேவர் சமுதாயத்தினரை திரைப்பட விழா மேடைகளில் இழிவாகவும் , தரக்குறைவாகவும் வேண்டுமென்றே திட்டமிட்டே பேசி பொய்யான குற்றச்சாட்டகளை கூறிவருகிறார் .
தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வைத்து மாமன்னன் என்ற படத்தை இயக்கியுள்ளார். மாமன்னன் என்ற பெயரானது ஆங்கிலேயருக்கு வரிசெலுத்த மறுத்த இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் நெல்கட்டும் செவலை மையமாக கொண்டு வாழ்ந்து வந்த மாமன்னன் காத்தப்ப பூலித்தேவனுக்கு வழங்கப்பட்ட பட்டம் மாமன்னன் ஆகும் .
மாமன்னன் காத்தப்ப பூலிதேவன் அவர்களுடைய பட்டமான மாமன்னன் என்ற பெயரில் படத்திற்கு பெயர் வைத்து ,ஒரு சமுதாயத்தை குறைத்து பேசுவது போன்ற செயல்களை வாடிக்கையாக்கி உள்ளார். திட்டமிட்டே இது போன்று பெயர் வைத்து உள்ளார்.
தற்போது மாரிசெல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படமானது முழுக்க முழுக்க சாதிய ரீதியாக வன்முறையை தூண்டும் திரைபடமாக உள்ளது. மாரிசெல்வராஜ் மாமன்னன் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசியதே சர்ச்சையாகி உள்ளது. மாமன்னன் திரைப்படமானது முழுக்க முழுக்க சாதிய ரீதியாக வன்முறையை தூண்டும் திரைபடமாக உள்ளது .
அனைத்து சாதியினரும் காட்டுமிராண்டி தனங்களை மறந்து நன்கு படித்து , கலெக்டர் , தாசில்தார் ; காவல்துறை , நீதிபதிகள் என அரசின் உயர்பதவிக்கு சென்றுவிட்டார்கள் . இதற்கு இப்படத்தில் நடித்த எம் எல் ஏ வும் ,தற்போதைய விளையாட்டு துறை அமைச்சருமால் உதயநிதி ஸ்டாலின் துணை போகிறார் .
மேற்படி உதயநதி ஸ்டாலின் இந்திய இறையாண்மையின்படி பதவி சத்தியபிரமாணம் எடுக்கும்போது எந்த ஒரு சமூகத்துக்கு எதிராகவும் ஒரு கலைபட்சமாக செயல்படமாட்டேள் என உறுதிமொழி எடுத்து உள்ளார்.
இதனால், திரைபடம் திரையிட தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.இந்த பொது நல மனு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கும் வர உள்ளது.