புரட்டி போட்ட சோகம் - ‘புலியூர் சரோஜா’ வாழ்வில் 2-வது இழப்பு!

தனது மகன் இறந்து 30 ஆண்டுகள் கடந்த பின்னும் அதிலிருந்து வெளிவரமுடியாமல் தவித்த நிலையில் தற்போது தனக்கு உறுதுணையாக இருந்த தனது காதல் கணவரின் மரணம் புலியூர் சரோஜாவை மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது.
புலியூர் சரோஜா, கணவர் மற்றும் மகனுடன்
புலியூர் சரோஜா, கணவர் மற்றும் மகனுடன்
Published on

பிரபல நடன இயக்குநர் புலியூர் சரோஜாவின் கணவரும், நடிகருமான ஜி.சீனிவாசன் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 95. வயது மூப்பு தொடர்பான உடல்நலசிக்கல்கள் காரணமாக கடந்த சில நாட்களாகவே தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று காலமானார்.

1970, 80களில் சினிமாவில் துணை கதாபாத்திரங்கள் மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்தவர், ஜி.சீனிவாசன். இவர் தஞ்சை மாவட்டத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். சிறு வயது முதலே நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னை வந்தார். ‘கிழக்கே போகும் ரயில்', ‘புதிய வார்ப்புகள்', ‘கன்னி பருவத்திலே', ‘ராணுவவீரன்', ‘இதயகோவில்', ‘ஐயா', ‘நகரம்', ‘வேங்கை' என 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். சில படங்களில் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். ஓரிரு படங்களையும் இயக்கியுள்ளார். இவரது மனைவி சினிமாவின் பிரபல நடன இயக்குனரான புலியூர் சரோஜா ஆவார்.

சரோஜாவின் பூர்வீகம் சேலம். இவர் திருவனந்தபுரத்தில் பாலசுப்ரமணியம், ராஜலட்சுமி தம்பதியினருக்கு மகளாக பிறந்தார். சோப்ரா மாஸ்டரிடம் உதவியளராக இருந்தவர் புலியூர் சரோஜா. நடன இயக்குநராக பணியாற்றிய முதல் படம் ‘இதய மலர்’.

இதையும் படியுங்கள்:
பிரபல காமெடி நடிகர் மரணம்... அதிர்ச்சியில் கோலிவுட்!
புலியூர் சரோஜா, கணவர் மற்றும் மகனுடன்

கலைத்துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி, அமிதாப்பச்சன், விஜயகாந்த் என பல திரை நட்சத்திரங்களை 80-களில் தனது கோரியோகிராபி மூலம் ஆட்டம் போட வைத்தவர் நடன இயக்குனர் புலியூர் சரோஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிப்படங்களிலும் பணியாற்றி உள்ளார்.

70 மற்றும் 80களில் புலியூர் சரோஜா 500 படங்களுக்கு மேல் நடன இயக்குநராக பணியாற்றி உள்ளார். 80களில் இவர் நடன இயக்குநராக பணிபுரிந்த அனைத்து படங்களின் பாடல்களும் மெகா ஹிட் அடித்தன. இவர் தான் தங்கள் படங்களில் நடன இயக்குனராக பணியாற்ற வேண்டும் என்று கால்ஹிட் கேட்டு காத்திருந்த படத்தயாரிப்பாளர்கள் ஏராளம். அன்று ஹிட் அடித்த அனைத்து ஹீரோக்களின் பின்னாளும் இந்த ‘புலி’ இருந்தது என்றே சொல்லவேண்டும்.

நடிகர் ரஜினிகாந்த்திற்கு நடனம் கற்றுத்தரும் புலியூர் சரோஜா
நடிகர் ரஜினிகாந்த்திற்கு நடனம் கற்றுத்தரும் புலியூர் சரோஜா

40 ஆண்டுகளாக சினிமாவில் நடன இயக்குனராக வலம் வந்த புலியூர் சரோஜாவும், சீனிவாசனும் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரே ஒரு மகன். அவர் பெயர் சத்தியநாராயணன்.

இப்படி சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் போது இவரது வாழ்வில் ஏற்பட்ட ஒரு பெரிய இழப்பு இவரையும், இவரது கணவரையும் திரையுலகை விட்டு முழுமையாக வெளியேற வைத்தது.

இவரது ஒரே ஆசை மகன் விபத்து ஒன்றில் உயிரிழந்தார். காலேஜ் ஃபைனல் இயர் படித்துக்கொண்டிருந்த இவரது மகன் தஞ்சாவூரில் தன் நண்பனுடன் ரோடு ஓரத்தில் நின்னு இளநீர் குடித்துக்கொண்டிருக்கும் போது அந்த வழியே வேகமாக சென்ற பஸ் அவரது மகனின் மேல் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தன் மகனின் உயிரிழப்பு இவரையும், இவரது கணவரையும் வெகுவாக பாதித்தது. மகன் இறந்த பிறகு ஏதும் வேண்டாம் என கருதி தனது கோடிக்கணக்கான சொத்துக்களை தானமாக எழுத்தி வைத்து விட்டார்.

தனது மகன் சத்தியநாராயணன் நினைவாக தனது கணவர் மற்றும் நடிகருமான சீனிவாசனுடன் சேர்ந்து பள்ளி ஒன்றை ஆரம்பித்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலசவ கல்வி வழங்கி வருகிறார். இவரது மகனின் பிறந்தநாள், நினைவுநாள், முக்கியமான பண்டிகை சமயங்களில் பள்ளிக்கு சென்று குழந்தைகளோடு நேரம் செலவிடுகின்றனர்.

புலியூர் சரோஜாவுடன் பணிபுரிந்தவர்கள்
புலியூர் சரோஜாவுடன் பணிபுரிந்தவர்கள்

இப்படி ஏற்கெனவே புலியூர் சரோஜாவின் வாழ்வில் இத்தனை சோகம் இருந்த நிலையில் நேற்றைய தினம் அவருடைய கணவரும் நடிகருமான ஜி.சீனிவாசன் காலமாகிவிட்டார். தனது கணவரின் உடலை பார்த்து சரோஜா கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

‘என் சோக கதையைக் கேளு தாய்க்குலமே’ பாட்டுக்கு புலியூர் சரோஜா தான் கோரியோகிராபி செய்திருந்தார். ஆனால் அதுபோலவே, அவரது கதையும் பெரும் சோகமாக மாறும் என்று அவர் நினைத்து பார்த்திருக்க மாட்டார்’ .

அவருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தை இன்றி தவிக்கும் உள்ளங்கள்..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com