புஷ்பா 2 படத்தில் சமந்தாவுக்கு பதில் ஆடும் இளம் நடிகை.. யார் தெரியுமா?

ஸ்ரீ லீலா
ஸ்ரீ லீலா

புஷ்பா படத்தில் பிரபலமான பாடல் போன்றே புஷ்பா 2 படத்திலும் ஒரு பாடல் அமைந்துள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்த புஷ்பா படம் கடந்த 2021ம் ஆண்டு ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் வந்த ஊ சொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார் சமந்தா. இந்த பாடல் உலகளவில் பேமஸாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆண்களை தரக்குறைவாக பேசுவதாக கண்டனங்கள் எழுந்தது. ஆனாலும் இந்த பாடலுக்கு வைப் செய்யாதவர்கள் யாருமில்லை.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான இந்த பாடலுக்கு ரசிகர்கள் இன்னும் உள்ளார்கள் என்றே சொல்லலாம். 5 மொழிகளில் வெளியான இந்த படத்தில் அமைந்துள்ள ஊ சொல்றியா பாடலை தமிழில் ஆண்ட்ரியா பாடினார்.

இந்த பாடலுக்கு முதலில் பாலிவுட் நடிகை திஷா பதானியை அணுகியுள்ளனர். அவர் ஒகே சொல்லாததால் சமந்தாவிடம் பேசி நடிக்கவைத்துள்ளனர். இந்த நிலையில் 2வது பாகத்திலும் இதே போன்று ஒரு பாடல் இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இந்த பாடலுக்கு நடிகை சமந்தா டான்ஸ் ஆடவில்லையாம். மாறாக தெலுங்கு திரையுலகை கலக்கி வரும் ஸ்ரீலீலா தான் புஷ்பா 2 படத்தில் குத்தாட்டம் போடவுள்ளதாக தெரிகிறது. இதற்காக இவர் ரூ.2 கோடி வரை சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com