பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையை சொல்லும் படம்  ‘புதர்’

பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையை சொல்லும் படம்  ‘புதர்’
Published on

அந்தமானில் வசிக்கும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ‘சென்டினல்’ மக்கள் பற்றிய பல்வேறு தகவல்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் ‘புதர்’. ஜாய்ஷோர் கிரியேஷன்ஸ் உடன் இணைந்து கெர்ப்சாரா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் கெர்ப்சாரா புரொடக்ஷன்ஸ்-ன் லிபின் குரியன் மற்றும் ஜாய்ஷோர் கிரியேஷன்ஸ்-ன் Dr. அகஸ்டினும் தயாரிக்கிறார்கள்.

டாக்டர் அகஸ்டின் இப்படத்தை இயக்க, சந்தோஷ் அஞ்சல் ஒளிப்பதிவு செய்கிறார். முதல் முறையாக பெண் இசையமைப்பாளர் திருமதி மேரி ஜெனிதா நான்கு மொழிகளிலும் இசையமைத்துள்ளார்.

இதன் பாடல் வெளியீட்டு விழாவில் ஆர்.பார்த்திபன், ஆர்.கே.சுரேஷ், சீனு ராமசாமி , ஆர்.எஸ்.சிவாஜி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

பழங்குடியினரைச் சேர்ந்த கோக்ரி (கோபாலகிருஷ்ணன்) என்பவர் வித்தியாசமான கதைக் களம் கொண்ட இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மற்ற நடிகர் நடிகைகள் தமிழ் மற்றும் மலையாள திரைத் துறையில் இருந்து நடித்திருக்கிறார்கள்.

இப்படம் கேரளா மற்றும் கர்நாடக எல்லைக்கு அப்பால் உள்ள குருபா தீவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தில் பழங்குடியினர் பேசும் மொழி தனித்துவமானது; வித்தியாசமானது. இந்த மொழிக்கான எழுத்துக்கள் அங்கு இல்லை.

ருக்மணி என்பவர் தனது பிஎச்டியை (PhD) முடிக்க ஹிடிம்பா என்ற தீவுக்குs செல்கிறார். அங்கு அவள் பழங்குடியினரால் பிடிக்கப்பட்டு, அவர்களில் ஒருவராக ஆக்கப்படுகிறாள். தன் இயல்பு வாழ்க்கைக்கு மீட்டெடுக்க அவள் சித்த மருத்துவர் ஒருவரின் உதவியை நாடுகிறாள். அப்புறம் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களைக் கோர்த்துக் கதை பின்னப்பட்டிருக்கிறது.

இப்படம் பழங்குடியினரின் இயல்பான பாலியல் வாழ்க்கையை வெளிப்படுத்துகிறது. பெண் சார்ந்த இந்தப் படம் அந்தமானில் உள்ள சென்டினல் தீவில் வாழும் சென்டினல் மக்களைப் பற்றியது. தென்னாப்பிரிக்கப் பழங்குடியினர் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சென்டினல் தீவுக்குக் குடிபெயர்ந்தனர்.

இந்தப் படத்தின் தனித்துவம் அதன் மொழியிலேயே உள்ளது. பழங்குடியினரின் மொழி, அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் சடங்குகள் கிட்டத்தட்ட 70% பயன் படுத்தப்பட்டுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com