ருத்ரன்
ருத்ரன்

ராகவா லாரன்ஸ் நடித்த ருத்ரன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு! நெட்டிசன்கள் ட்ரோல்!

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. நடன இயக்குனர், நடிகர், டைரக்டர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் இப்போது நடித்திருக்கும் படம் “ருத்ரன்”. 

இப்படத்தில் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குநராக அறிமுகமாகிறார். ராகவா லாரன்ஸ் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கதிரேசன் இயக்கத்தில் ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. மேலும் இப்படத்தின் வீடியோவையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

தற்போது ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த டிரெய்லர் படத்திற்கான மென்மேலும் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. ஏற்கனவே, இப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த ட்ரெய்லரின் ஆரம்பம் முதலே ஆக்‌ஷனில் பொளந்து கட்டுகிறார் ராகவா லாரன்ஸ். ஆனால், அது யதார்த்தமாக இல்லாமல், பக்கா சினிமாத் தனமாக இருக்கிறது. இந்த டிரெய்லர் ரசிகர்களையே ஜெர்க் விட வைத்துள்ளது என கிண்டல் செய்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com