ராகவா லாரன்ஸின் ருத்ர தாண்டவம்!

ருத்ரன்
ருத்ரன்

ராகவா லாரன்ஸ் அடுத்ததாக 'ருத்ரன்' என்னும் படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் கதிரேசன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ், ஷியாம் பிரசாத் ஆகியோர் முக்கிய வேடத்திலும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி கோன்சால்வ்ஸ் எடிட்ங் செய்துள்ளார் மற்றும் சண்டை காட்சிகளை ஸ்டண்ட் சில்வா அமைத்துள்ளார்.

டிசம்பர் 2022 கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்த படம் வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் முன்னதாக சொல்லிருந்தனர். ஆனால், சிம்பு நடிக்கு 'பத்து தலை', தனுஷ் நடிக்கும் 'வாத்தி' மற்றும் பல திரைப்படங்கள் டிசம்பர் மாதத்தில் வெளியாக உள்ள நிலையில் 'ருத்ரன்' படம் டிசம்பர் 2022 ல் இருந்து ஏப்ரல் 2023ற்கு மாத்தப்பட்டது. அதுமட்டும் இல்லை 'ருத்ரன்' படம் வரும் 14 ஏப்ரல் 2023 ல் வெளியாகும் எனவும் தெரியவந்துள்ளது.

ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ்

மேலும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஹாரர் த்ரில்லர் படத்திற்காக ராகவா லாரன்ஸ் பல தோற்றங்களில் நடிக்கவுள்ளார் படத்தின் போஸ்டர் கடந்த ஜூன் மாதம் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டர்களில் ராகவா லாரன்ஸ் பலவேடங்களில் காட்சி அளித்துள்ளார் . ராகவா லாரன்ஸ் ரசிகர்கள் அனைவரும் படம் வெளியாகும் நாளை எண்ணி காத்திருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com