

இயக்குனர் ராஜமௌலி தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறிய பேச்சு பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ராஜமௌலி. இவரது இயக்கத்தில் வெளியான பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இவர் நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ‘எஸ்.எஸ்.எம்.பி 29’ படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இப்படம் ஆக்சன், அட்வென்ச்சர் ஜானரில் உருவாக உள்ளது. இப்படம் காசியின் வரலாற்றைப் பேசும் கதையாக உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒடிஷா, ஹைதராபாத், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ‘எஸ்.எஸ்.எம்.பி 29’ படத்தின் டைட்டில் , பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியீட்டு நிகழ்வு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தொடர்ந்து, ராஜமௌலி – மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘வாரணாசி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கபட்டது.
இந்த நிகழ்வில் பேசிய ராஜமௌலியின் தந்தையும், திரைக்கதை ஆசிரியருமான விஜயேந்திர பிரசாத், “இந்தப் படம் ஒரு தெய்வீக முடிவு, ராஜமவுலியின் இதயத்தில் இருந்து ஹனுமன் இப்படத்தை இயக்குவதற்கு வழி நடத்துகிறார்" என்றார். பின்பு நிகழ்ச்சியில் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியாக சிறிது நேரம் தடைபட்டு போனது. இதனால் ஆத்திரமடைந்த இயக்குனர் ராஜமௌலி, எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. என் அப்பா அனுமன் நமக்குப் பின்னால் இருந்து பார்த்துக் கொள்வார் என சொன்னார். இப்படித்தான் பார்த்துக் கொள்வாரா. இதை நினைத்தால் எனக்கு கோபம் வருகிறது. என் மனைவிக்கும் அனுமன் மேல் நிறைய அன்பு உண்டு. அவர் அனுமனை தனது நண்பனை போல நினைத்து பேசுவார். இதனால் மனைவி மீதும் எனக்கு கோபம் வரும் என்றார்.அதற்காக நான் ஒருமுறை அவளிடம் கோபம் கூடப்பட்டேன். இவரின் பேச்சு பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ராஜமௌலியின் இந்தக் கருத்துகள்தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.