ரஜினி 171 படம் : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட புதிய தகவல்!

rajini - lokesh
rajini - lokesh

2024 ஆம் ஆண்டு ரஜினி 171 வது படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க இருப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

ஐந்து படங்களை மட்டுமே இயக்கிய தமிழ்நாட்டின் மிகப்பெரிய இயக்குனர்களின் பட்டியலில் இணைந்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதிரடி ஆக்சன் திரில்லர் படங்கள், பிரபல கதாநாயகர்கள், மிகப்பெரிய பொருள் செலவு, பாசிட்டிவான பெரும்பான்மையான விமர்சனங்கள் என்று லோகேஷ் கனகராஜ் தன்னுடைய படங்கள் மூலம் தனக்கான தனி இடத்தை உருவாக்கி இருக்கிறார். இப்படி இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் தற்போது வெளியாகியுள்ள லியோ வரை லோகேஷ் கனகராஜுக்கு தமிழ் திரை உலகில் முக்கிய இடத்தை பெற்று தந்திருக்கிறது.

மேலும் தற்போது நடிகர் ரஜினியின் 171 வது படத்தை இயக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். லியோ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதற்கான பணிகளை தொடங்க உள்ளார்.இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறியது, லியோ திரைப்படம் மக்களுக்கு பிடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டில் வெற்றியை பெற்றிருக்கிறது. இப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறது.

லியோ பல்வேறு விதமான கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. அந்த விமர்சனங்கள் அனைத்தையும் நான் ஆராய்ந்து கவனித்து வருகிறேன். அவற்றில் உள்ள விஷயங்களை கவனித்து அடுத்த படங்களை இன்னும் நேர்த்தியாக எடுக்க முயற்சிக்கிறேன்.தற்போது ரஜினி சாருடன் இணைந்து புதிய படம் எடுக்க உள்ளேன். புதிய படத்தின் படப்பிடிப்பு 2024 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தொடங்கும். படத்திற்கான நடிகர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com