

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தனது 173-வது படமாக கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை பிரபல காமெடி இயக்குனர் சுந்தர்.சி இயக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை, அடுத்த ஒரு வாரத்தில் அந்தப் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் சுந்தர் சி.
அதன்பின் அப்படத்திற்காக சில இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின. பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்,டிராகன் பட இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து,மகாராஜா பட இயக்குனர் நித்திலன் சாமிநாதன் ஆகியோர் ரஜினிக்காக கதை எழுதினார்கள். அவர்கள் சொல்லிய கதைகளில் அஷ்வத் மாரிமுத்துவின் கதையை ரஜினி தேர்வு செய்துள்ளார் என்று சொல்கிறார்கள்.
படத்தின் கதையை ரஜினியுடன் அஸ்வத் மாரிமுத்து விவாதித்துள்ளார்.அவர் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷன்ல் தயாரிக்க இருக்கிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியானது.ஆனால் எதுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை
இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு தலைவர் 173 தொடர்பான முக்கிய அறிவிப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளதாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.எனவே, இந்த படத்தை அதிகாரபூர்வமாக இயக்கப்போவது யார் என்கிற விபரம் காலை 11 மணிக்கு தெரிந்துவிடும்