ரஜினி 171 படம்.. அவரே கொடுத்த அப்டேட்!

rajini - lokesh
rajini - lokesh

நடிகர் ரஜினியின் 171வது படம் குறித்து அவரே பேசியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மாஸ் வெற்றியடைந்த நிலையில், பலரும் ரஜினி - லோகேஷ் காம்போ படத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய், கமல், கார்த்தி என முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுத்து ப்ளாக் பஸ்டர் கொடுத்துள்ளார். இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய்யின் லியோ படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் தீபாவளியையொட்டி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், அடுத்ததாக ரஜினியுடன் படம் எடுக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்த படம் எப்போது வரும் என ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கோயம்புத்தூரில் நடைபெற்ற தனது பேத்தி காது குத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவரது மனைவி லதாவுடன் சென்னை விமான நிலையம் சென்றார். அப்போது காரிலிருந்தபடியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் இணைய உள்ளீர்கள், தலைவர் 171 படம் எப்படி வரும்? என்ற கேள்விக்கு, தலைவர் 171 படம் நிச்சயமாக நல்லா வரும். ஆனால் அந்த படம் முதலில் வராது. தற்போது லைக்கா தயாரிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிப்பதால் அதன்பிறகுதான். லோகேஷ் படம் வரும் என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com