ரஜினிக்கு இந்தக் கதை திருப்தி இல்லையாம்! அதனால் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது இவராகவும் இருக்கலாம்!?

ரஜினிக்கு இந்தக் கதை திருப்தி இல்லையாம்! அதனால் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது இவராகவும் இருக்கலாம்!?

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'தலைவர் 171' படத்தை 'டான்' பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் இயக்குனர் மாறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அன்று முதல் இன்று வரை அனைத்து தரப்பு ரசிகர்களாலும், தமிழ் மக்களாலும் வியந்து பார்க்கப்படுபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நேற்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்தின் இளமையும், சுறுசுறுப்பும், ஸ்டைலும் இன்றளவும் குறையாமல் அனைவர் மத்தியிலும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் வலம் வருகிறார்.

இவரது நடிப்பில் 2002ல் வெளியான 'பாபா' திரைப்படம் சில காட்சிகள் நீக்கப்பட்டு டிசம்பர் 10ம் தேதியன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. 'பாபா' திரைப்படம் வெற்றிப்படமாக அமையவில்லையென்றாலும் ரீ ரிலீஸில் முதல் நாளே 1 கோடிக்கும் மேல் வசூல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரஜினி, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், த்ரிஷா, கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படம் 2023 ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கிறது.

இதைத்தொடர்ந்து, ரஜினிகாந்த் லைக்கா நிறுவன தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்கவிருக்கிறார். அதில் ஒன்றில் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்' படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார்.

இதையடுத்து, ரஜினியின் அடுத்த படமான 'தலைவர் 171' படத்தை 'டான்' பட புகழ் சிபி சக்ரவர்த்தி இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சிபி சக்ரவர்த்தி கூறிய கதை ரஜினிக்கு திருப்தி அளிக்கவில்லையாம். அதனால் இவருக்குப் பதிலாக வேறு இயக்குநர் தேர்வு செய்யப் போவதாக கூறப்படுகிறது. அதன்படி, 'தலைவர் 171' படத்தை தேசிங் பெரியசாமி அல்லது கார்த்திக் சுப்புராஜ் இயக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com