ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

கெத்தா.. ஸ்டைலா.. வேட்டையன் பராக்.. வெளியானது தலைவர் 170 டைட்டில்!

Published on

ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய 170வது படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாஸ் வெற்றியடைந்த நிலையில், அதன் வசூல் எக்கச்சக்கமாக எகிறியது. பான் இந்தியா நடிகர்கள் நடித்திருந்ததால் இந்த படம் இந்திய அளவில் நல்ல வசூலை பெற்றது. இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள தலைவர் 170 படம் ரசிகர்கள் மனதில் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாகியுள்ளது.

குறிப்பாக ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த.செ. ஞானவேல் தலைவர் 170 படத்தை எழுதி இயக்குவதால் இப்படத்தின் கதை எப்படிப்பட்டதாக இருக்கும் என பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் தொடர்ந்து சில நாட்களாக படக்குழுவினர் குறித்த அப்டேட்டுகளை வெளியானது. அதன்படி படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும், நடிகைகள் மஞ்சு வாரியர், சார்பேட்டா பரம்பரை பட நடிகை துஷாரா விஜயன் மற்றும் நடிகை ரித்திகா சிங் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவர் 170வது படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. அதாவது ரஜினியின் 170வது படத்தின் பெயர் வேட்டையன் என அறிவிக்கப்பட்டுள்ளது. டைட்டிலுடன் கூடிய டீசர் வீடியோவில், நடிகர் ரஜினிகாந்த் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார். அதே ஸ்டைலோடு, குறி வச்சா, இறை விழுகனும் என்று தெரிவிக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் படம் எப்போது வரும் என எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com