rajini - lokesh
rajini - lokesh

தலைவர் 171 படத்தின் அப்டேட் கொடுத்த லோகேஷ்.. குஷியில் ரசிகர்கள்!

Published on

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் கேமியோ ரோலில் நடிக்கலாம் என லோகேஷ் கனகராஜ்ஜே அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

தலைவர் 171 மூலம் முதன்முறையாக ரஜினி - லோகேஷ் கூட்டணி இணைகிறது. இதனால் தலைவர் 171 படத்துக்கு மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் அனைத்தும் படமும் ஹிட்டாகி வருகிறது. இதுவரை விஜய், கமல் என பெரிய ஹீரோவை வைத்து படம் எடுத்து ஹிட்டடித்துள்ளார்.

முதல் படமான மாநகரமே இவருக்கு பெரிய வரவேற்பை அளித்தது. சமீபத்தில் விஜய் - லோகேஷின் கூட்டணியில் வெளியான லியோ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படமெடுக்கவுள்ளார்.இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் மாஸ்டர்ஸ் ஆக்‌ஷன் கோரியோகிராபி செய்கின்றனர். இதுதவிர தலைவர் 171 படத்தில் யாரெல்லாம் இணைந்துள்ளனர் என்பது தெரியவில்லை. ஆனால், சிவகார்த்திகேயன் மட்டும் கண்டிப்பாக நடிப்பார் என கூறப்படுகிறது.

தலைவர் 171ல் ரஜினி நெகட்டிங் ஷேடில் கேங்ஸ்டர் ரோலில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் மலையாளத்தில் இருந்து மம்முட்டி, பிருத்விராஜ் ஆகியோர் இணையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், படத்தில் ரன்வீர் சிங்கை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவதாக தெரிகிறது.

Rancveer Singh
Rancveer Singh

மீண்டும் இருவரும் ஒரு சந்திப்பு நடத்தினால் அது சக்ஸஸ் என்று அர்த்தம்.

வேட்டையன் படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் அடுத்து லோகேஷ் கனகராஜுடன் தலைவர் 171 படத்தில் ரஜினிகாந்த் கமிட்டாகியுள்ளார். ஃபைட் கிளப் படத்தின் பிரமோஷனின்போது பேசிய லோகேஷ் கனகராஜ், ‘இந்தப் படம் அதிரடி ஆக்ஷன் திரில்லராக உருவாகவுள்ளதாகவும் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை இன்னும் 2 மூன்று மாதங்களில் முடித்துவிடுவேன் என்றும், ஏப்ரல் மாதத்தில் படத்தின் சூட்டிங் துவங்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com