"அலப்பறை கெளப்புறோம்" ரஜினியின் கூலி பட ஷூட்டிங் ஸ்டார்ட்ஸ்.!

Coolie
Coolie

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படட்தின் ஷூட்டிங் தற்போது தொடங்கியுள்ளது.

தலைவர் 171 மூலம் முதன் முறையாக ரஜினி - லோகேஷ் கூட்டணி இணைகிறது. இதனால் தலைவர் 171 படத்துக்கு மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் அனைத்தும் படமும் ஹிட்டாகி வருகிறது. இதுவரை விஜய், கமல் என பெரிய ஹீரோவை வைத்து படம் எடுத்து ஹிட்டடித்துள்ளார்.

முதல் படமான மாநகரமே இவருக்கு பெரிய வரவேற்பை அளித்தது. சமீபத்தில் விஜய் - லோகேஷின் கூட்டணியில் வெளியான லியோ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படமெடுக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது அடுத்தடுத்த படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். 71 வயதாகும் ரஜினிகாந்த் இன்றளவிலும் அயராது தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினியின் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. பின் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்:
ஜெயிலுக்கு போன ஈஸ்வரி... அதிர்ச்சியில் கோபி... அடுத்து நடக்கப்போவது என்ன?
Coolie

தொடர்ந்து லோகேஷ் கூட்டணியில் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் மாஸ்டர்ஸ் ஆக்‌ஷன் கோரியோகிராபி செய்கின்றனர். இந்த படத்தில் ரஜினியுடன் பகத் பாசில், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த படத்திற்கு கூலி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கூட இந்த படத்தின் ரஜினி கெட்டப் குறித்த போட்டோ வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் அவரது 171-வது திரைப்படமான "கூலி" திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்கியுள்ளது. விரைவில் சென்னையிலும் இந்த படத்திற்கான படபிடிப்பு பணிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய மூத்த மகள் பிரபல நடிகை மற்றும் பாடகி சுருதிஹாசன் அவர்கள் படபிடிப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே அவரோடு இணைந்து "இனிமேல்" என்ற ஒரு இசை ஆல்பத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com