ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் சங்கி கருத்து சர்ச்சை.. ரஜினிகாந்த் கொடுத்த விளக்கம்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ஸ்வர்யா ரஜினிகாந்த் சங்கி குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அதற்கு விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் கடந்த 26ஆம் தேதி லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில், இயக்குனராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடிக்கடி தான் தனது தந்தையை சங்கி என்று சொல்லும் வார்த்தையை கேட்கிறேன். அப்படி என்றால் என்ன என கேட்டபோது, அது ஒரு அரசியல் சார்ந்து இருப்பது என கூறினார்கள். ரஜினிகாந்த் சங்கி இல்லை. யாரும் அப்படி சொல்லாதீர்கள். எனக்கு அது வருத்தமாகவுள்ளது.

சங்கியாக இருப்பவர்கள் யாரும் லால் சலாம் படத்தின் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டார்கள். படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும் என தெரிவித்தார்.

இந்த கருத்து பேசும்பொருளான நிலையில், சங்கி என்றால் கெட்ட வார்த்தையா என கேள்வி கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்திடமும் இதே கேள்வி கேட்கப்பட்டது. என் மகள் சங்கி கெட்டவார்த்தை என எங்கேயும் சொல்லவில்லை. என் அப்பாவை அப்படி சொல்லாதீர்கள் என்று தார் சொன்னார். மேலும் இது எனது மகளின் கருத்தே தவிர படத்தின் விளம்பரத்திற்காக எதுவும் செய்யவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com