அடுத்த பட அப்டேட் சொன்ன ரஜினிகாந்த்.. குஷியில் ரசிகர்கள்!

rajinikaanth
rajinikaanth

தனது அடுத்த பட அப்டேட்களை பற்றி நடிகர் ரஜினிகாந்த் பேட்டி கொடுத்துள்ளார்.

தனது மகள் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் தான் லால் சலாம். இந்த படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வித்தியாசமான தோற்றத்தில் நடித்த ரஜினிகாந்தை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், வேட்டையின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினி இன்று சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், லால் சலாம் திரைப்படம் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ரொம்ப பிடித்துள்ளதாக இருக்கிறது, படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது, படத்தை தயாரித்த நிறுவனம் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

நடிகர் விஜய்யை தொடர்ந்து விஷால் அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், Sorry அரசியல் குறித்த கேள்விகள் வேண்டாம். என தெரிவித்தார்.

வேட்டையின் திரைப்படம் 80% சதவிகிதம் படப்பிடிப்புகள் முடிந்துள்ளதாகவும், அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படப்பிடிப்பு துவங்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் வேட்டையன் ரிலீஸ் பற்றி கேள்விகேட்டபோது, படத்தின் ரிலீஸ் பற்றி இப்போதைக்கு சொல்லமுடியாது என ரஜினிகாந்த் கூறினார்.

இந்நிலையில் லால் சலாம் படத்தை தொடர்ந்து ரஜினியின் நடிப்பில் உருவாகும் வேட்டையன் மற்றும் தலைவர் 171 ஆகிய திரைப்படங்களும் இந்த ஆண்டே திரையில் வெளியாகும் என தெரிகின்றது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com